Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை - 602118, காஞ்சிபுரம் .
Arulmigu Subramaniyaswamy Temple, Vallakottai - 602118, Kancheepuram District [TM001797]
×
Temple History

தல வரலாறு

ஸ்தல வரலாறு இத்திருத்தலம் சுமார் 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழமையானது. இலஞ்சி என்னும் தேசத்தில் சலங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இம்மன்னனை காண நாரதமகரிஷி ஓரு முறை வர அம்மன்னன் மிக்க ஆணவதினால் மகரிஷியை அவமதித்தான். மிக்க கோபத்துடன் மகரிஷி வனத்திற்குச் சென்றார். திக்விஜயம் செய்துவரும் அசுரன் கோரனை மகரிஷி கண்டு கர்வம் கொண்டுள்ள பகீரத மன்னனை வென்றால் உனது திக்விஜயம் பூத்தியாகும் என்று சொல்லி சென்றார். அவ்வரசன் கோரன் பகீரத மன்னனை போரில் சென்றான். அனைத்தும் இழந்த பகீரத மன்னன் கானகம் சென்றான். அங்கு நாரதமகரிஷி வருவதை கண்டு விழ்ந்து வணங்கி என்னை மன்னித்து நல்வழிகாட்டிடுங்கள் என்று வேண்டினான். நாரதமகரிஷி மனம் மகிழ்ந்து துர்வாச முனிவரிடம் சென்று வணங்கி...