Arulmigu Umameheswarar Temple, Kuthalam, Konerirajapuram - 612201, Mayiladuthurai District [TM018000]
×
Temple History
தல வரலாறு
தமிழகத்தின் பழங்கால சோழ வள நாட்டின் காவிரியின் தென் கரைத் தலங்களில் தலப்புராண வரலாறும் தேவாரப் பாடல்களும் பெற்றச் சிறப்பும் சோழப் பேரரசின் பெருந்தேவியாக விளங்கிய செம்பியன்மா தேவியினால் கற்றளியாகத் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம் திருநல்லம் உமா மகேஸ்வரர் திருக்கோயிலாகும். திருநல்லம் தலபுராணம் வடமொழி ஸ்ரீகந்தபுராணத்தில் நந்தியம் பெருமான் சனத்குமார முனிவர்க்குக் கூறுவதாக அமைந்துள்ளது. முன்னொர காலத்தில் பூமிதேவி துராத்மாவான அசுரனால் பாதாளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டாள். அதை அறிந்த திருமால் வராக உருவம் எடுத்து பாதாளம் சென்று அவளை மீட்டு வந்தார். திருமாலை வணங்கிய பூமிதேவியை ஆசீர்வதித்து அவனது பயத்தைப் போக்கி சடாட்சர மந்திர உபதேசம் செய்து நீ காவிரியின் கரையிலுள்ள அரச...தமிழகத்தின் பழங்கால சோழ வள நாட்டின் காவிரியின் தென் கரைத் தலங்களில் தலப்புராண வரலாறும் தேவாரப் பாடல்களும் பெற்றச் சிறப்பும் சோழப் பேரரசின் பெருந்தேவியாக விளங்கிய செம்பியன்மா தேவியினால் கற்றளியாகத் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம் திருநல்லம் உமா மகேஸ்வரர் திருக்கோயிலாகும். திருநல்லம் தலபுராணம் வடமொழி ஸ்ரீகந்தபுராணத்தில் நந்தியம் பெருமான் சனத்குமார முனிவர்க்குக் கூறுவதாக அமைந்துள்ளது. முன்னொர காலத்தில் பூமிதேவி துராத்மாவான அசுரனால் பாதாளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டாள். அதை அறிந்த திருமால் வராக உருவம் எடுத்து பாதாளம் சென்று அவளை மீட்டு வந்தார். திருமாலை வணங்கிய பூமிதேவியை ஆசீர்வதித்து அவனது பயத்தைப் போக்கி சடாட்சர மந்திர உபதேசம் செய்து நீ காவிரியின் கரையிலுள்ள அரச வனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் பூசித்து வழிபட்டு அசுரபயம் நிரந்தரமாக நீங்கப்பெறுவாய் என ஆசீர்வதித்தார். அவ்வண்ணமே பூமிதேவி காவிரிக் கரையிலுள்ள அரச வனத்தின் கண் அசரமரத்தின் கீழ் இலிங்க வடிவில் எழுந்தருளி இருந்த சிவபெருமானைக் கண்டு மகிழ்ந்து அவ்விடத்தில் கோயில் எடுப்பித்து சிவாகம முறைப்படி பூசனைகள் இயற்றி வழிபட்டு வந்தாள். அவளது பூசனையைக் கண்டு உவந்த பெருமான் அவளுக்குக் காட்சி தந்து அவளது அசுரபயத்தைப் போக்கி நிலைபெறும் பேறளித்தார். பூமிதேவி வழிப்பட்டதால் இத்தலம் பூமிகரம் எனவும் விளங்கியது. பூமிதேவியால் நிர்மாணிக்கப் பெற்ற தீர்த்தமே பூமி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது.இத்தலம் பெருமானை வைகாசி மாத்தில் பூமி தீர்த்தத்தில் நீராடி பூசனை செய்து வழிப்பட்டால் அசுரபயம் நீங்கும் பல நல்ன்களும் பெற்று இன்புறலாம் எனத் தலபுராணம் கூறுகிறது.
இலக்கிய பின்புலம்
திருநல்லம் தலவரலாறு
தமிழகத்தின் பழங்கால சோழ வள நாட்டின் காவிரியின் தென்கரைத் தலங்களில் தலப்புரான வரலாறும் தேவராப் பாடல்களும் பெற்றச் சிறப்பும் சோழப் பேரரசின் பெருந்தேவியராக விளங்கிய செம்பியன்மா தேவியினால் கற்றளியாகத் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம் திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயில் உள்ள ஊர் தற்காலத்தில் கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இருப்பிடம்
கோனேரிராஜபுரம் கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் பதூரிலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரத்தின் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோயிலைச் சென்றடையலாம்.
தல இறைவர்
திருநல்லத் தல இறைவர் உமாமகேஸ்வரர் என அழைக்கப்பெறுகிறார். மேலும் இத்தலப் பெருமான் உமாதேவியைத் திருமணம் செய்து கொண்டு,...திருநல்லம் தலவரலாறு
தமிழகத்தின் பழங்கால சோழ வள நாட்டின் காவிரியின் தென்கரைத் தலங்களில் தலப்புரான வரலாறும் தேவராப் பாடல்களும் பெற்றச் சிறப்பும் சோழப் பேரரசின் பெருந்தேவியராக விளங்கிய செம்பியன்மா தேவியினால் கற்றளியாகத் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம் திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயில் உள்ள ஊர் தற்காலத்தில் கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இருப்பிடம்
கோனேரிராஜபுரம் கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் பதூரிலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரத்தின் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோயிலைச் சென்றடையலாம்.
தல இறைவர்
திருநல்லத் தல இறைவர் உமாமகேஸ்வரர் என அழைக்கப்பெறுகிறார். மேலும் இத்தலப் பெருமான் உமாதேவியைத் திருமணம் செய்து கொண்டு, திருமண கோலத்தில் விளங்குவதால், இவரை கல்யாண சுந்தரர் எனவும் அழைக்கிறார்கள். இவ்விறைவர் பூமிதேவி பூசித்து வழிபட்டதால் பூமிநாதர் எனவும் கல்வெட்டுகளில் திருநல்லமுடையார் எனவும் அழைக்கப்பெறுகிறார்.
தல இறைவி
இத்தல அம்பிகைப் பெயரைத் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலில் அங்கோல் வளை மங்கை எனக் குறிப்பிடுகிறார். அப்பெயர் அங்கவள நாயகி என மருவி அது வடமொழியில் தேகசுந்தரி எனவும் மங்கள அணியாகிய அழகிய வளையல் அணிந்த மங்கை என்ற பொருளுடைய அங்ககோல்வளை மங்கை என்பதை மங்கள நாயகி எனவும் பெயர்கள் வழங்குகின்றன.
தீர்த்தம்
இத்தலத்தில் பூமிதேவியால் ஏற்படுத்தி நீராடப் பெற்ற பூமி தீர்த்தமும் பிரமனால் ஏற்படுத்தப் பெற்ற பிரம்ம தீர்த்தமும் விசுவ கர்மாவினால் நிர்மாணிக்கப் பெற்ற ஞானகூபம் என்னும் கிணறும் உள்ளன.
இத்தீர்த்தங்களில் நீராடுவோர் பைசாச பயமும் குட்ட நோயும் பிற பாவங்களும் நீங்கி நலம்பெறுவர். ஞானகூப நீரை அருந்துபவர்கள் ஈடில்லா சிவஞானம் பெறுவர் என தல வரலாறு கூறுகிறது.
தல விருட்சம்
இத்தலத்தின் தல விருட்சம் அரசமரம் ஆகும். அரச மரத்தைத் தல விருட்சமாக உடைய தலங்களாகிய காசி, திருவாவடுதுறை போன்று திருநல்லமும் சிறப்புமிக்க தலமாகும்.
தல சிறப்பு
திருநல்லம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புடையது. இத்தல மூர்த்தியாகிய உமாமகேஸ்வரர் பெருமானைத் தேவர்களும் முனிவர்களும் அரசர்களும் வழிபட்டனர். அவர்களில் பூமிதேவிக்கு அசுரபயம் போக்கி அருள் செய்ததும், சந்திர குல மன்னன் புரூரவசுவின் குட்ட நோய் போக்கி அருள் செய்ததும் கௌதம முனிவர்க்கு ஆனந்த தாண்டவக் காட்சி காட்டியருளியதும் இத்தலப் பெருமானின் அருட்டிறங்களாகும்.
நலமார் மறையோர் வாழ் நல்ல நகர் என திருஞானசம்பந்தப் பெருமான் புகழும் சிறப்புடைய தலம் திருநல்லமாகும்.
வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்ந்த நல்ல ஊர் என்பதால் நல்லம் எனப் பெயர் பெற்றதோ எனக் கருத வேண்டியுள்ளது.
சோழ மன்னர்கள் வந்து தங்கி திருநல்லமுடையாரை வழிபட்டதால், கோனேரிராஜபுரம் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டதோ எனவும் கருத இடமுண்டு.
திருநல்லத்தின் எட்டு திசைகளிலும் அட்டதிக்கு பாலகர்களால் நிறுவி, பூசித்து வழிபட்ட சிவத்தலங்கள் சூழ்ந்து உள்ளன.