திருநல்லம் தலவரலாறு தமிழகத்தின் பழங்கால சோழ வள நாட்டின் காவிரியின் தென்கரைத் தலங்களில் தலப்புரான வரலாறும் தேவராப் பாடல்களும் பெற்றச் சிறப்பும் சோழப் பேரரசின் பெருந்தேவியராக விளங்கிய செம்பியன்மா தேவியினால் கற்றளியாகத் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம் திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் உள்ள ஊர் தற்காலத்தில் கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது. இருப்பிடம் கோனேரிராஜபுரம் கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் பதூரிலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரத்தின் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோயிலைச் சென்றடையலாம். தல இறைவர் திருநல்லத் தல இறைவர் உமாமகேஸ்வரர் என அழைக்கப்பெறுகிறார். மேலும் இத்தலப் பெருமான் உமாதேவியைத் திருமணம் செய்து கொண்டு,...