அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், துக்காச்சி, நாச்சியார் கோயில் - 612602, தஞ்சாவூர் .
Arulmigu Abathsagayeswarar Temple, Thukkachi, Nachiyarkoil - 612602, Thanjavur District [TM018001]
×
Temple History
தல வரலாறு
திருத்தல வரலாறு
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், துக்காச்சி, நாச்சியார்கோயில் வழி, கும்பகோணம் வட்டம். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
துக்காச்சிக்கு அருகிலுள்ள கூகூரில் திகழும் ஆதித்தேஸ்வரம் என்னும் சோழர்கால சிவாலயம் தற்போது ஆம்ரவணேஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்பெறுகின்றது. அவ்வாலயத்தில் காணப்பெறும் முதலாம் இராஜராஜசோழனின் 7ஆம் ஆண்டு (கி.பி.992) கல்வெட்டு சாசனம் 14 ஆண்டு (கி.பி.999) சாசனம், 15 ஆண்டு (கி.பி.1000) சாசனம் ஆகியவை துக்காச்சி என்னும் இவ்வூரினை விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடுகின்றன. இச்சான்று கொண்டு நோக்கும்போது பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி.730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்ற பெயரில் துக்காச்சி அழைக்கப்பெற்றது என்பதறிகிறோம். சதுர்வேதி மங்கலம் என்பது நான்கு வேதங்களும் படித்து புலமை பெற்ற...திருத்தல வரலாறு
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், துக்காச்சி, நாச்சியார்கோயில் வழி, கும்பகோணம் வட்டம். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
துக்காச்சிக்கு அருகிலுள்ள கூகூரில் திகழும் ஆதித்தேஸ்வரம் என்னும் சோழர்கால சிவாலயம் தற்போது ஆம்ரவணேஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்பெறுகின்றது. அவ்வாலயத்தில் காணப்பெறும் முதலாம் இராஜராஜசோழனின் 7ஆம் ஆண்டு (கி.பி.992) கல்வெட்டு சாசனம் 14 ஆண்டு (கி.பி.999) சாசனம், 15 ஆண்டு (கி.பி.1000) சாசனம் ஆகியவை துக்காச்சி என்னும் இவ்வூரினை விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடுகின்றன. இச்சான்று கொண்டு நோக்கும்போது பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி.730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்ற பெயரில் துக்காச்சி அழைக்கப்பெற்றது என்பதறிகிறோம். சதுர்வேதி மங்கலம் என்பது நான்கு வேதங்களும் படித்து புலமை பெற்ற அந்தணர்கள் வாழும் ஊர் என்பதைக் குறிப்பதாகும். பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் தன் பெயரால் துக்காச்சி என்றும் இவ்வூரினை விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதி மங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்தான் என்பதை இராஜராஜ சோழனின் கல்வெட்டுச் சாசனங்களால் அறிய முடிகிறது. எனவே 1300 ஆண்டுகளாக இவ்வூர் துக்காச்சி என்றும், விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பெற்றமையை அறிகிறோம்.
திருக்கோயிலமைப்பும் சிற்பங்களும்
விக்கிரம சோழீஸ்வரம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் இரண்டு திருச்சுற்றுகளையும், கிழக்கு திசையில் இரு இராஜகோபுரங்களையும் பெற்ற திருக்கோயிலாகும். முதற்பிரகாரம் 65மீ.யீ 38.50மீ அளவுடையதாகும். இப்பகுதியில் 7.35மீ. ஒ 7.70மீ அளவில் கருவறையும், 7.35மீ.ஒ7.72மீ அளவில் அர்த்த மண்டபமும், 12.35மீ.ஒ15.50மீ அளவில் ஸ்நபன மண்டபமும் கிழக்குத் திசை நோக்கியவாறு அமைந்துள்ளன.
கருவறையின் ஸ்ரீவிமானம் திவிதளம் எனும் மூன்றடுக்குடையதாகும். முதற்தளம் வரை கருங்கற் கட்டுமானமாகவும் அதற்கு மேல் செங்கற் கட்டுமானமாகவும் ஸ்ரீவிமானம் திகழ்கின்றது. ஸ்ரீவிமானத்தின் தென்புறக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்குத் திசையில் இலிங்கோத்பவரும், வடதிசையில் பிரமனும் அருள்பாலிக்கின்றனர். முன் மண்டபத்தின் வெளிப்புற கோஷ்டங்களில் இருந்த சில தெய்வதிருமேனிகள் காலப்போக்கில் சிதைந்து அழிந்துவிட்டன. இம்மண்டபத்தின் முகப்பு பகுதி தேர் அமைப்பில் வடிவமைக்கப்பெற்றுள்ளது. இதில் தென் திசையிலும் வடதிசையிலும் படியமைப்புகள் உள்ளன. குதிரைகளும், யானைகளும் தேர்க்காலுடன் (சக்கரத்துடன்) திகழும் இத்தேர் மண்டபத்தை இழுத்து செல்வதாக அமைக்கப்பெற்றுள்ளது. யானையின் மீது போர் வீரர்களின் சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் காணப்பெறும் வடபுற கோஷ்டத்தில் கையில் மழு ஏந்திய வண்ணம் அமர்ந்துள்ள சண்டீசரின் உருவமும், தென்புற கோஷ்டத்தில் இருந்த பிட்சாடனார் உருவம் காணப்பெறவில்லையாயினும் அருகே இடபம் சிவகணங்கள், தாருகாவனத்தின் இருடிகளின் மனைவியர் ஈசனுக்குப் பிட்சையிடும் காட்சி சிற்பங்கள் உள்ளன. இங்கு உள்ள பெண்களின் அணிகலன்கள் கழன்றும், ஆடைகள் நெகிழ்ந்தும் காணப்பெறுகின்றன. தென்திசையில் காணப்பெறும் நடராஜ மூர்த்தியின் கை, கால்கள் உடைக்கப்பெற்றுள்ளன. ஒருபுறம் உமா தேவி இடபமருகில் நின்றவண்ணம் ஆடவல்லானின் ஆடலில் மயங்கி நிற்கிறாள். மறுபுறம் வாணன் குடமுழவம் எனும் தாள இசைக் கருவியை இசைத்த வண்ணம் அமர்ந்துள்ளான். மற்றொரு கோஷ்டத்தில் காணப்பெறும் அர்த்தநாரீஸ்வரர் ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் வடிவெடுத்து இடபத்தோடு நின்ற வண்ணம் காணப்பெறுகின்றார்.
மூலவர் திருக்கோயில் மண்டபத்தில் பிரதிட்டை செய்யப்பெற்றுள்ள சரபமூர்த்தியின் வடிவம் சோழர் கலையின் சிறந்த படைப்பாகும்.
இவ்வாலயத்து வடபுற கோஷ்ட மாடத்தில் குபேரனின் திருவுருவம் உள்ளது. தலையில் மகுடம், காதுகளில் பத்ர குண்டலம், கழுத்தில் மணிமாலை, மார்பில் யக்ஞோபவிதம் எனும் புரிநூல், வயிற்றில் உதரபந்தம் ஆகியவை உள்ளன. வலக்கரம் அபயதான முத்திரை காட்ட இடக்கரத்தில் கதையை பிடித்தவாறு நின்ற கோலத்தில் குபேர மூர்த்தி காணப்படுகிறார்.
துக்காச்சியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்த கற்பலகையில் காணப்பெற்ற கல்வெட்டுச் சாசனத்தை இந்திய தொல்லியல் துறையினர் 1918ஆம் ஆண்டில் 6ஆம் எண் கல்வெட்டாக பதிவு செய்துள்ளனர்.
தல பெருமை
திருத்தல வரலாறு :
சோழவள நாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் விளங்கும் தென் திருக்காளத்தி எனும் துர்க்கை ஆட்சித்தலப் பெருமை மிகச் சிறப்புடையதாகும்.
பாதிரிவனம் சூழ்ந்த இடத்தில் முன்பே அமைந்திருந்த இத்திருக்கோயில் இராஜராஜ சோழன் காலத்திலும் பின் குலோத்துங்க சோழன் காலத்திலும் நிர்மானிக்கப் பெற்று ஆட்சி செய்த விக்ரம சோழப் பேரரசனாலும் திருப்பணி செய்யப்பட்டது.
கருவறையில் லிங்க வடிவில் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மூலவராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் அழகு தெய்வமாக ஸ்ரீ சௌந்தர நாயகியம்மன் தெற்கு நோக்கி நின்றவாறு அருள்பாலித்து வருகிறார்.
மூலவர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் அம்பாள் ஸ்ரீ செள்ந்தரநாயகி இருபெரும் தெய்வங்களாக மகத்தான பலன் கொடுக்கும் தெய்வங்களாக இத்தலத்தில் போற்றப்படுகின்றன. ...திருத்தல வரலாறு :
சோழவள நாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் விளங்கும் தென் திருக்காளத்தி எனும் துர்க்கை ஆட்சித்தலப் பெருமை மிகச் சிறப்புடையதாகும்.
பாதிரிவனம் சூழ்ந்த இடத்தில் முன்பே அமைந்திருந்த இத்திருக்கோயில் இராஜராஜ சோழன் காலத்திலும் பின் குலோத்துங்க சோழன் காலத்திலும் நிர்மானிக்கப் பெற்று ஆட்சி செய்த விக்ரம சோழப் பேரரசனாலும் திருப்பணி செய்யப்பட்டது.
கருவறையில் லிங்க வடிவில் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மூலவராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் அழகு தெய்வமாக ஸ்ரீ சௌந்தர நாயகியம்மன் தெற்கு நோக்கி நின்றவாறு அருள்பாலித்து வருகிறார்.
மூலவர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் அம்பாள் ஸ்ரீ செள்ந்தரநாயகி இருபெரும் தெய்வங்களாக மகத்தான பலன் கொடுக்கும் தெய்வங்களாக இத்தலத்தில் போற்றப்படுகின்றன.
அம்பாள் பரமேஸ்வரி இவ்வாலய தல விருட்சமான பாதிரி பூக்களைக் கொண்டு மூலவரை பூஜித்ததால் தன்னுடைய தோஷம் நீங்கப்பெற்று அருள்பெற்ற ஒரே தலம் இத்தலம் ஆகும்.
சரஸ்வரதி, லெட்சுமி, பார்வதி ஆகிய மூனறு தேவிகளும் ஒன்று சேர்ந்த சக்தியான ஸ்ரீசிவதுர்க்கையம்மன் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்த போது தன்னுடைய சக்தியாக விளங்கக் கூடிய பார்வதியை சௌந்தரமாக வா என சிவபெருமான் அழைக்க பார்வதி வெளிப்பட்டதால் இத்தல இறைவிக்கு சௌந்தர்ய நாயகி எனப் பெயர் பெற்றது.