அருள்மிகு சாரங்பாணிசுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Sarangapaniswamy Temple, Kumbakonam, Kumbakonam - 612001, Thanjavur District [TM018018]
×
Temple History
தல பெருமை
தலபுராணம்
திருவரங்கம் பெரிய பெருமாளும், திருவேங்கடமுடையானும், இத்தலத்து எம்பெருமானும் ஒருவரே என்பது, பெரியோர்களின் துணிவு. பண்டு சூரியனும், பிரமனும் பகவானைக் குறித்துத் தவம் செய்தனர். தவத்தினால் மகிழ்ந்த பெருமான் ஸ்ரீ வைகுந்த விமானம், பிரணவாக்ருதி விமானம், வைதிக விமானம் என்ற மூன்று விமானங்களைப் படைத்து அம்மூன்றினுள்ளும் மூன்று வடிவத்தில் பெருமாள் அமர்ந்தார். முதல் விமானத்தைப் பிரமனுக்கும், மூன்றாவது விமானத்தைச் சூரியனுக்கும் தந்தார். அவர்களும் இவ்விரு விமானங்களுடன் பெருமாளை வணங்கி வந்தனர். அதில் சூரியன் மூலமாய் அவன் புத்திரன் மனுவிற்கு வைதிக விமானம் கிடைத்தது. அதனைப் பூலோகத்தில் சரயூ நதிக்கரையில் இட்டு வைவச்வதமனு பூசித்து வந்தான்.
அப்பரம்பரையில் தோன்றிய இக்ஷ்வாகு என்ற மன்னன், மற்றோர் விமானமாகிய பிரணவாகர விமானத்தைப் பிரமனிடம் இருந்து ...தலபுராணம்
திருவரங்கம் பெரிய பெருமாளும், திருவேங்கடமுடையானும், இத்தலத்து எம்பெருமானும் ஒருவரே என்பது, பெரியோர்களின் துணிவு. பண்டு சூரியனும், பிரமனும் பகவானைக் குறித்துத் தவம் செய்தனர். தவத்தினால் மகிழ்ந்த பெருமான் ஸ்ரீ வைகுந்த விமானம், பிரணவாக்ருதி விமானம், வைதிக விமானம் என்ற மூன்று விமானங்களைப் படைத்து அம்மூன்றினுள்ளும் மூன்று வடிவத்தில் பெருமாள் அமர்ந்தார். முதல் விமானத்தைப் பிரமனுக்கும், மூன்றாவது விமானத்தைச் சூரியனுக்கும் தந்தார். அவர்களும் இவ்விரு விமானங்களுடன் பெருமாளை வணங்கி வந்தனர். அதில் சூரியன் மூலமாய் அவன் புத்திரன் மனுவிற்கு வைதிக விமானம் கிடைத்தது. அதனைப் பூலோகத்தில் சரயூ நதிக்கரையில் இட்டு வைவச்வதமனு பூசித்து வந்தான்.
அப்பரம்பரையில் தோன்றிய இக்ஷ்வாகு என்ற மன்னன், மற்றோர் விமானமாகிய பிரணவாகர விமானத்தைப் பிரமனிடம் இருந்து பெற்று இரண்டையும் பூசித்து வந்தான். இருவிமானங்களும் ஒன்றாகிவிட்டன. கடைசியில் இக்ஷ்வாகு வமிசத்தில் ஸ்ரீராமன் வரையில் சூரியகுல தேவதையாக எழுந்தருளி இருந்த இவ்விரு விமானங்களும் ஸ்ரீ ராமன் பட்டாபிஷேகத்துக்குப் பின் பரிசாக விபீஷணனுக்குக் கிடைத்தது. விபீஷணன் அவ்விமானத்தை எடுத்துக்கொண்டு இலங்கை செல்லுகையில் திருவரங்கத்தில் அவ்விமானம் எடுக்க இயலாமல் எம்பெருமான் திருஅருளால் அமைந்துவிட்டது. அப்பொழுது விபீஷணனிடம் திருஅரங்கன் கூறியபொழுது இதில் இருந்து பிரிந்து முன்போல் தனித்து விளங்கும், வைதிக விமானத்துடன் நான் திருக்குடந்தையில் எழுந்தருளி இருக்கப்போகிறேன் என்று கூறினார். அதனால் இந்த விமானத்தின் மூலம் திருவரங்கப் பெருமானே இங்கு எழுந்தருளினார் என்ற வரலாறு அறியக்கிடக்கிறது.
மேலும், பிருகு என்ற முனிவர் பரதேவதையார் என்றறியப் புறப்பட்ட சமயத்தில் திருமால் திருமார்பில் உதைத்த மாபெரும் அபசாரத்தை நினைத்து வருந்தி மறுபிறவியில் மறுபிறவியில் ஹேமமுனிவராகப் பிறந்து மேருமலையில் எம்பெருமானைக் குறித்துத் தவம் செய்தார். பெருமான் எரிரில் தோன்றவே, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, தனது குற்றத்தைப் பொறுத்தருளவேண்டி, எம்பெருமானுடைய தேவியான திருமகளைத்தான் பெண்ணாக அடையவேண்டினார். பெருமாளும் இசைந்து முனிவரே காவிரி ஆற்றங்கரையில், பிரமன் என்னை வழிப்பட்ட வனத்தின் நடுவில் பொற்றாமரை என்ற புஷ்கரணியில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையில் அமர்ந்து, மகாலக்ஷ்மியானவள் என்னை நினைத்துக் கோமளவல்லி என்ற திருப்பெயருடன் தவம் செய்கிறாள். அங்குச் சென்று அத்திருமாமகளைப் பெண்ணாகக்கொண்டு காத்துவாருங்கள். எல்லாம் நினைத்தபடியே நிறைவேறும் என்று கூறி மறைந்தார். ஹேமமுனிவரும் எம்பெருமான் கட்டளைப்படிக்கே, பொற்றாமரைப் புஷ்கரிணியை அடைந்து கோமளவல்லித் தாயாரைக்கண்டு, மகிழ்ந்து அவளைப் புத்திரியாகப் பாவனை செய்து வளர்த்து வந்தார். நாள்தோறும் அக்குளத்தின் வடகரையில் பாரிஜாத மரத்தடியில் அமர்ந்து எம்பெருமான் எழுந்தருளும் நன்னாளை எதிர்பார்த்திருந்தார். எம்பெருமான் திருவுள்ளம் கூடவே, திருவரங்கவப்பன் தனது பிரணவாகார விமானத்தினின்று, இதுவரை சேர்ந்திருந்த ஸோமச்சந்த விமானம் என்ற வைதிக விமானத்தைப் பிரித்து, அதில் தான் சார்ங்கராஜாவாக எழுந்தருளிப் புறப்பட்டு, திருக்குடந்தை அடைந்து, தைமாதப்பிறப்பன்று, நடுப்பகல் வேளையிலே விருஷப லக்கினத்தில், பொற்றாமரை புஷ்கரிணிக் கரையில் ஹேமமகரிஷிக்கும், ஸ்ரீ கோமளவல்லித் தாயாருக்கும் தரிசனம் தந்தருளினார். அப்பொழுது ஸ்ரீ கோமளவல்லித் தாயாரைத் தன் திருமார்பில் ஏற்றும், மற்றொரு உருவத்துடன் ஹேம்மகரிஷி தன் புத்திரியான கோமளவல்லியைத் திருமணம் செய்விக்கத் திருமணம் செய்துகொடுக்கவும் அருள்புரிந்தார். முனிவர் வேண்ட, தாயாருடன் இத்தலத்திலேயே பக்தப்பெருமக்களுக்குத் தரிசனம் தந்தருளிக்கொண்டு இருக்கிறார். முனிவரும் எம்பெருமானுக்குத் திருக்கோயில் கட்டி, உத்சவம் கண்டருளச் செய்து, தீர்த்தவாரியையும் இப்புஷ்கரிணியில் நடத்தி வைத்து அங்கேயே அமுதன் பணியிலும், தரிசனத்திலும் ஈடுபட்டுப் பலபால் எழுந்தருளி இருந்தார். இந்தத் தை மாத உத்சவத்திற்குப் பின் பிரமன் முதலியோர் எழுந்தருளிச் சித்திரையில் சித்திரை நக்ஷத்திரத்தில் திருத்தேர் உத்சவம் அமையும்படி அவர்கள் சித்திரைப் பெருவிழாவையும் நடத்திவைத்தனர்.