அருள்மிகு ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Aadhikumbeswaraswamy Temple, Kumbakonam, Kumbakonam - 612001, Thanjavur District [TM018019]
×
Temple History
தல பெருமை
உலகெல்லாவற்றையும் அழித்துவிடும் மகாப்பிரளயம் ஏற்படவிருப்பதை முன்னதாகவே அறிந்து கொண்ட பிரம்ம தேவன் பிரளயத்திற்குப் பிறகு அழிந்து போகும் உயிர்களை யாம் எவ்வாறு ஆக்கிப்படைப்போம் என அஞ்சி இமயமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகின்றார். பெருமானே பிரளயத்தின் போது பெருவெள்ளத்தில் உலகெல்லாம் அழிந்து விடும். அதன் பின்னர் யாம் எவ்வாறு உயிர்களின் படைப்புத் தொழிலை புரிவேன் இதற்கொரு வழி கூறுங்கள் என்று அருளுமாறு முறையிட்டான். இம்முறையீட்டிற்கு செவிசாய்த்த இறைவன் பிரம்மதேவ அஞ்சற்க இப்போதே நீ பல புண்ணிய தலங்களில் உள்ள மணலை சிறிது சிறிதாக எடுத்து வந்து அவற்றுடன் அமுதத்தை சேர்த்து பிசைந்து மாயமக்கும்பம் பானை ஒன்று செய்து அதில் அமுதத்தை நிரப்புக பஞ்சபூத சக்தியுடன் எழுவகைத் தோற்றமும் நான்கு வகை பீஜமுள்ள...உலகெல்லாவற்றையும் அழித்துவிடும் மகாப்பிரளயம் ஏற்படவிருப்பதை முன்னதாகவே அறிந்து கொண்ட பிரம்ம தேவன் பிரளயத்திற்குப் பிறகு அழிந்து போகும் உயிர்களை யாம் எவ்வாறு ஆக்கிப்படைப்போம் என அஞ்சி இமயமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகின்றார். பெருமானே பிரளயத்தின் போது பெருவெள்ளத்தில் உலகெல்லாம் அழிந்து விடும். அதன் பின்னர் யாம் எவ்வாறு உயிர்களின் படைப்புத் தொழிலை புரிவேன் இதற்கொரு வழி கூறுங்கள் என்று அருளுமாறு முறையிட்டான். இம்முறையீட்டிற்கு செவிசாய்த்த இறைவன் பிரம்மதேவ அஞ்சற்க இப்போதே நீ பல புண்ணிய தலங்களில் உள்ள மணலை சிறிது சிறிதாக எடுத்து வந்து அவற்றுடன் அமுதத்தை சேர்த்து பிசைந்து மாயமக்கும்பம் பானை ஒன்று செய்து அதில் அமுதத்தை நிரப்புக பஞ்சபூத சக்தியுடன் எழுவகைத் தோற்றமும் நான்கு வகை பீஜமுள்ள அனைத்து சீவராசிகளின் உயிர்களையும் கொண்ட விதையாகிய ஜீவ வித்துக்களை யாம் தருவோம் அவற்றை கும்பத்தில் இடுக. பிறகு தேங்காய் மாவிலை தர்ப்பை நாணல்புல் நூல் இவற்றால் அலங்கரித்து நான்கு புறங்களிலும் மறை ஆகமங்களை வைத்து வில்வத்தால் அர்ச்சனை செய்க பின்னர் அமுதகுடத்தை உறியில் வைத்து இமயமலையில் உச்சியில் வைத்திடுக. பிரளயத்தின்போது அக்கும்பம் தென்திசை நோக்கி மிதந்து சென்று ஓர் இடத்தில் தங்கும். அப்போது யாம் அவ்விடம் எழுந்தருளி வேண்டுவன செய்வோம் என இறைவர் திருவாய் மொழிந்தார். பிரம்மனும் அவ்வாறே செய்து முடித்தார். பின்னர் சில நாட்களில் கடல்களெல்லாம் ஒன்றாய் கலந்து பிரளய வெள்ளம் தோன்றி உலகையெல்லாம் அழிக்கத் தொடங்கியது. எங்கும் பெரும் மழை பெரும் வெள்ளம் பெருங்காற்று. அப்போது சிவபெருமான் அருளியபடி அமுதகும்பம் தென்திசை நோக்கி மிதந்து வந்து ஓர் இடத்தில் தங்கியது. அவ்விடமே கும்பகோணம். அமுதகுடத்தைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மன் இத்தலத்தின் குடம் தங்கியதைக் கண்டு பெரும் மகிழ்ச்சிக் கொண்டான். இவற்றையெல்லாம் இமயமலையில் இருந்தவாறு கவனித்த இறைவர் ஓர் வேடரூபம் புனைந்து தம் பரிவாரங்கள் புடைசூழ உமாதேவியை விடை கொண்டு தென்திசை நோக்கிச் செல்லுகையில் திருவிடைமருதூர்க்குக் கீழ் பாரிசத்தில் வந்தவுடன் அமுத குடத்தை கண்ணுற்று பக்கத்திலிருந்த சாஸ்தாவுக்குக் காட்டி இக்குடத்தை ஓரம்பால் சிதைத்து உள்ளிருக்கும் அமிர்தம் நாற்திசையும் வழிந்தோடச் செய்வது நமது உத்தேசம் என்றார். சாஸ்தாவும் இறைவனின் திருவுளப்படி உடனே ஆகுக என்று தனது தூணிலிருந்து ஓர் அம்பை எடுத்து இறைவனிடம் நீட்டினார். அழியா மாயக்குடத்தினை அழிக்கவல்ல அம்பு இதுவன்று எனக்கூறி அதன் உண்மை இப்போது தெரியுமெனச் சொல்லி வில்லை வளைத்து பாணத்தைத் தொடுக்க அது காற்றினும் கடிந்து விரைந்து அமுதகுடத்தை தாக்கியும் குடம் உடையாது கண்டு சாஸ்தா தலைகுனிந்து நின்றார்.பிறகு இறைவர் சற்று மேற்கே சென்று பாணம் ஒன்று தொடுக்க குடம் இரண்டாகி அமுதம் நாற்திசையும் வழிந்து ஐந்து குரோசத்தூரம் ஆறாய்ப் பெருகி எழுந்த அமுதம் எண்திசையும் சென்று பரவியது. குடத்தை அலங்கரித்திருந்தப் பொருட்களான உறி வில்வம் தேங்காய் தர்பைப்புல் பூணூல் முதலியன பல்வேறு இடங்களில் விழுந்து அவை இலிங்கங்களாகத் தோன்றின. அவற்றுள்ள உறியில் இருந்து தோன்றியவர் சிக்கேசர் வில்வம்வில்வனேசர் தேங்காய் நாளிகேரேசர் பூணூல் யக்ஞோபவீதம் என விளங்க பாணம் தொடுத்த இடம் பாணபுரேசம் ஆனது. குடம் உடைந்தபோது அதன் வாயில் ஒரு குரோசத்தூரம் சென்று விழுந்தது. அவ்விடம் குடவாயில் ஆனது. வழிந்த அமுதத்தைப் பூமி குழிந்து தாங்குக என இறைவர் நினைந்தருள அவ்வண்ணமே அமுதம் இரண்டிடத்தில் தங்கியது. இவ்விரண்டும் பொற்றாமரையும் , மகாமக தீர்த்தமுமாயின. பிறகு இறைவர் அமுதகுடத்தை அணுகி அமுதத்தால் நனைந்த வெண்மணலை வாரி எடுத்து அவற்றை குடத்தில் சேர்த்து பிசைந்து இலிங்கமாக்கினார். பிறகு இறைவர் வேட உருவம் களைந்து பண்டைய உருவத்துடன் பிரம்மருக்கு காட்சி கொடுத்து லிங்கத்தை தாமே பூசித்து ஜோதியாய் எழுந்து லிங்கத்துள் கலந்தார். இறைவர் உயிர் சிருஷ்டிக்கு முன்னமே இத்தலத்தில் உறைந்ததால் ஆதிகும்பேசர் எனப்பட்டார்.