அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், Thirucherrai - 612605, தஞ்சாவூர் .
Arulmigu Saraparameshwarar Temple, Thirucherrai - 612605, Thanjavur District [TM018023]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மஹாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் புராதன பழமையும், சிறப்பும் உடைய 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் அப்பர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்களால் பாடல்பெற்ற சிறப்புடைய ஸ்தலமாகும்.இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மஹாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் புராதன பழமையும், சிறப்பும் உடைய 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் அப்பர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்களால் பாடல்பெற்ற சிறப்புடைய ஸ்தலமாகும்.
தல பெருமை
புராண வரலாற்று படி, இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், ஸ்ரீ விநாயகருக்கு அருகில் உள்ள லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்திஸ்வராக விளங்க கூடிய ஸ்ரீ ரினா விமோசமான லிங்கேஸ்வரர் ஆகும். மனித பிறவி எடுத்த ஒவொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள். ஒருவர் பிறக்கும் போது நல்ல ஆரோகியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வி உடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமேயானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேற்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனான ஸ்ரீ ரினா விமோசன லிங்கேஸ்வரர் 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11...புராண வரலாற்று படி, இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், ஸ்ரீ விநாயகருக்கு அருகில் உள்ள லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்திஸ்வராக விளங்க கூடிய ஸ்ரீ ரினா விமோசமான லிங்கேஸ்வரர் ஆகும். மனித பிறவி எடுத்த ஒவொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள். ஒருவர் பிறக்கும் போது நல்ல ஆரோகியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வி உடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமேயானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேற்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனான ஸ்ரீ ரினா விமோசன லிங்கேஸ்வரர் 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேகம் செய்வித்தால் நம் பிரார்த்தனைகள் நிறைவேறும். கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், மக்கட்பேறு கல்வி பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்