எந்நாட்டிலும் சிறந்த நன்னாடாகிய சோழவளநாட்டில், புண்ணிய நதியான காவிரியின் உபநதியான முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் இருநாயன்மாரல் போற்றிப் பாடப்பெற்ற மகத்துவங்கள் பல கொண்ட அற்புதமான திருக்கோயில் ஆகும். மனித உயிர்கள் அனைவரும் தம் வாழ்நாட்களில் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும்.மற்றும்பெறப்போகும் அனைத்துவிதமான கடன்களையும் நீக்கி அருளும் ஸ்ரீரிண விமோசனர் எனப்படும் அருள்மிகு கடன் நீவர்த்தீஸ்வரர் பிரார்த்தனை தெய்வமாக இத்திருக்கோயிலில் எழுந்தருளி தம்மை அர்ச்சித்து வணங்கும் அனைவருடைய, அனைத்து விதமான கடன்களையும் நீக்கி அருள்புரிந்து வருகிறார். வேறு எந்த சைவத் திருக்கோயில்களிலும் இல்லாத வகையில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்ரீ காலபைரவர் இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மேலும் சிவ தூர்க்கை, வைஷ்ணவி தூர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று வித துர்க்கை அம்மன்கள் இத்திருத்தலத்தில் எழுந்தருளி...