Arulmigu Uthvaaganathaswamy Temple, Thirumanancherri - 609801, Mayiladuthurai District [TM018026]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு
ஒரு நாள் உமையம்மைக்கு ஒரு விசித்திரமான விருப்பம் எழுந்தது. சர்வ வல்லமையும் பொருந்திய நாதா, தங்கைளை பூலோக முறைப்படி மணம் புரிந்து பூரிப்படைய என் உள்ளம் உவகை கொண்டுள்ளது. தேவீர் அருள் கூர்ந்து என் விருப்பத்தை ஈடேற்றக் கோருகிறேன்- என்று தமது எண்ணத்தை கூறினார். தேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஈசன் கூறினார். வரும் பிர்ம கற்பத்தில் உன் விருப்பப்படியே மற்றொருமுறை உன்னை மணம் புரிந்துக் கொள்ளவேன் என்று சிவபெருமான் கூறினார். தனது எண்ணத்தை சிவபெருமான் நிறைவேற்றி வைப்பதாகக் கூறினாலும் மணம் புரிந்து கொள்வதற்காக...தல வரலாறு
ஒரு நாள் உமையம்மைக்கு ஒரு விசித்திரமான விருப்பம் எழுந்தது. சர்வ வல்லமையும் பொருந்திய நாதா, தங்கைளை பூலோக முறைப்படி மணம் புரிந்து பூரிப்படைய என் உள்ளம் உவகை கொண்டுள்ளது. தேவீர் அருள் கூர்ந்து என் விருப்பத்தை ஈடேற்றக் கோருகிறேன்- என்று தமது எண்ணத்தை கூறினார். தேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஈசன் கூறினார். வரும் பிர்ம கற்பத்தில் உன் விருப்பப்படியே மற்றொருமுறை உன்னை மணம் புரிந்துக் கொள்ளவேன் என்று சிவபெருமான் கூறினார். தனது எண்ணத்தை சிவபெருமான் நிறைவேற்றி வைப்பதாகக் கூறினாலும் மணம் புரிந்து கொள்வதற்காக தன் நாயகன் குறித்துள்ள நாளுக்கு இன்னும் வெகுகாலம் உள்ளதே என்று மனவருத்தம் கொண்டார் தேவி பின்னர் இதுவே ஈசனிடம் அலட்சியமாக நடந்துக்கொள்ள காரணமாயிற்று.
உமாதேவியின் அலட்சியத்தால் சிவபெருமானுக்கு கோபம் எழுந்ததால், தேவியை நோக்கி உன் விருப்பத்திற்கு நான் சம்மதித்த போதும் காலம் தள்ளியிருக்கிறதே என்று நீ என்னிடம் அலட்சியமாக நடந்துகொள்ள தலைப்பட்டு விட்டாய் ஆதலால் நீ என்னிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியது அவசியமாகிவிட்டது. எனவே நீ பூலோகத்தில் பசுவாக அவதரித்து வாழகடவாய் என்று கட்டளையிட்டார்,
அசுக்காட்டில் அம்பிகை :
ஈசனின் சாபத்தால் பூவுலகில் அம்பிகை கோ (பசு) உருவில் வலம் வர வேண்டியதாயிற்று தேரழந்தூரில் அம்பிகை பசுவாக சாபம் பெற்று அசிக்காட்டில் பசு உருவம் கொண்டு கோமலில் உலவி வந்தார். சிவபெருமானிடம் தான் அவ்வாறு நடந்தது தவறு என்று மனம் வருந்தினார். தன் செயலால் வருந்தவதாயும் தனக்கு அருள்புரியுமாறு அம்பிகை ஈசனிடத்தில் வேண்டிக் கேட்டுக் கொண்டதில் சிவபெருமானுக்க கொஞ்சம் சினம் தணிந்து அம்பிகைக்கு வேறு ஒரு உபாயம் செய்தார்-
பசு உருவில் தனித்து உலாவிய தேவிக்கு துணையாக கலைமகள், அலைமகள், இந்திராணி உள்ளிட்ட அமரமாதர்கள் பலரையு கோ உருவில் உலவிட சிவெருமான் கூறினார். அதன்படி அம்பிகையுடன் மற்றவர்களும் கோ உருக்கொண்டு அசுக்காடு அரசக்காடு மற்றும் அதை சற்றியக் கிராமங்களிலும் உலவி வந்தனர்.
கோ உருவங் கொண்ட அம்பிகை காடுகளில் உலவி வந்த போதிலும் சிவபெருமானையே எந்நேரமும் நினைத்து வந்ததால் அக்காடுகளில் உள்ள சிவலிங்கத்தின் மீது அருவிப்போல் பாலை பொழிந்தார். தன்னால் சாபமளிக்கப்பட்ட தேவி கோ உருவில் உலவினாலும் தேவியின் எண்ணம் யாவும் தம்மீதே பதிந்திருப்பதைக் கண்டு அந்த அன்பினால் அனுதினமும் தன்மீது பாலைப் பொழிவதைக் கண்டு சிவபெருமான் பெரிதும் மனம் குளிர்ந்தார்.
இவ்வாறு பாலை பொழியும்போது கோ உருவிலிருந்த தேவியின் பாதக்குளம்புகள் ஈசனின் உடல் மீது பட்டுத் தழும்புகள் உண்டாயின. இதனால் அவ்விடமானது திருக்குளம்பம் என்ற பெயரைப் பெற்ற சிறப்புடன் விளங்கிவருகிறது.
திருவாவடுதுறையில் கோமுக்தி
அம்பிகையின் செயல்களால் மனம் குளிர்ந்த சிவபெருமான் கோ உருவிலிருந்த அம்பிகைக்கு முக்தி கொடுத்து மீண்டும் தேவியை பூலோகத்தில் அவதரிப்பதற்கான வழிவகைகளை செய்தார். எனவே திருவாவடுதுறையில் சிவபெருமானால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.
இறைவன் எதிர்கொண்ட எதிர்கொள்பாடி :
இறைவன் கூறியது கண்ட பரத்வாஜ மகரிஷி உமாதேவியின் திருக்கல்யாண வைபவத்திற்காக செயல்பட்டார். விவாஹத்திற்கான கங்கணதாரணமும் மங்கள ஸ்நானமும் திருவேள்விக் குடியில் செய்தார். பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப் பாலையில் சிறப்பாகச் செய்தார்.
பின்னர் உமாதேவியை அழைத்துக்கொண்டு இறைவனை காணுவதற்காகப் புறப்பட்டார் பரத்வாஜ மகரிஷி அவ்வாறு இவர்கள் சென்றபோது ஓரிடத்தில் இறைவனே இவர்களை எதிர்க்கொண்டார். இவர்களாகத் தேடிச் சென்றபோது இறைவனே எதிர்கொண்ட இடத்திற்கு திருஎதிர்கொள்பாடி என்ற காரணப்பெயர் வரலாயிற்று.
திருமணஞ்சேரியில் திருக்கல்யாண வைபவம் :
திருஎதிர்கொள்பாடியிலே சிவபெருமானை எதிர்கொண்டு வந்ததும் மாப்பிள்ளையான சிவபெருமானை அழைத்துச் சென்றார். பரத்வாஜ மகிரிஷி இதற்குள் சிவபெருமான் தேவியின் திருக்கல்யாண வைபவத்தைக் காண விண்ணவர்கள் கின்னர்கள் தானவர்கள் முதலான அனைவரும் பூலோகத்தில் வந்து கூடினார்.
திருமணஞ்சேரியில் நடைபெற இருக்கும் திருக்கல்யாணத்தைக் காண சப்த சாகரங்களம் மாலையாக மாறி திருமணஞ்சேரிக்கு வந்தன. எல்லோரின் முன்னிலையிலும் இறைவனுக்கு இறைவிக்கும் திருக்கல்யாணம் பரத மகரிஷியால் செய்து வைக்கப்பட்டது. இதனால் அந்த இடத்திற்கு திருமணஞ்சேரி என் ற அழகான காரணப்பெயர் அமையப்பெற்றது.
திருமணக்கோலம் கொண்ட சிபெருமான் ஸ்ரீ கல்யாண சுந்தரராக ஸ்ரீ உத்வாகநாதராகு எழுந்தருளி தன்னை நாடி வந்தோர்க்கு தன் அருளை வழங்குவதால் அருள்வள்ள நாதராக இத்திருத்தலத்தில் காட்சி தருகிறார்.
எவ்வாறு அம்பிகை இங்கு தான் விரும்பியவாறு மணம் புரிந்து கொண்டாரோ அவ்வாறே தன்னையும் தன் நாயகனையும் வந்து வணங்குவோருக்கு அவரவரர்களின் விருப்பப்படி மணம் முடிய அம்பிகை இங்கே இறைவனுடன் இணைத்து கோகிலாம்பாளாக அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.