திருநாவுக்கரசர் பதிகம் பட்ட நெற்றியர் பாய்புலி தோலினர் நட்ட நின்று நவில்பவர் நாளொரும் சிட்டர் வாழ் திருவார் மணஞ்சேரியும் வட்டவார் சடையார் வண்ணம் வாழ்த்துமே வளம் கொழிக்கும், தமிழ் மணக்கும் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறை நகரத்தையடுத்த குத்தாலம் நகரின் வடபால் சுவாமி 5 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றது திருமணஞ்சேரி. நற்றவர் பேறுபெற்ற நாயன்மார் பலரும் போற்றிப்பாடியுள்ள அருள்வள்ளநாதர் திருக்கோயில் கொண்டு மங்காப் புகழுடன் ஒளி வீசிக் காட்சி தரும் சைவப் பெருந்தலம் எம்பெருமான் கல்யாண சுந்தரமூர்த்தி திருவுளம் கொண்டு கோகிலாம்பாள் அம்பிகை தன்னைக் கைப்பிடித்து இங்குத் திருமணம் செய்துகொண்ட காரணத்தால் அந்த பெயரடைந்த திருத்தலம். எம்பெருமான் திருக்கல்யாணம் வைபவத்திற்காக சப்த சாகரங்களும் மாலையாக மாறி வந்ததாக...