அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம் - 609105, மயிலாடுதுறை .
Arulmigu Naaganathaswamy Temple, Keezhaperumpallam - 609105, Mayiladuthurai District [TM018032]
×
Temple History
தல வரலாறு
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலைக் கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களைக் காப்பாற்றினார். தனது விஷத்தை சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது. வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி , தனக்கு அருள் செய்த கோலத்தில், காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி...தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலைக் கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களைக் காப்பாற்றினார். தனது விஷத்தை சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது. வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி , தனக்கு அருள் செய்த கோலத்தில், காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி , நாகநாதர் என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார். ஸ்ரீகேதுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காவேரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் நவக்கிரக கோவில்களில் கீழப்பெரும்பள்ளமும் ஒன்றாகும்.
பொது தகவல்: இத்தலவிநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கேதுபகவான் தனி சன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு தலையுடனும், மனி உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார். படிப்பில் முன்னேற்றம், குடும்ப விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.
தல பெருமை
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, நாகநாதர் என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார். ஸ்ரீ...தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, நாகநாதர் என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார். ஸ்ரீ கேதுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காவேரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் நவக்கிரக கோவில்களில் கீழப்பெரும்பள்ளமும் ஒன்றாகும்.