Screen Reader Access     A-AA+
அருள்மிகு பரிமளரெங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை - 609001, மயிலாடுதுறை .
Arulmigu Parimalarenganathar Temple, Thiruinthalur, Mayiladuthurai - 609001, Mayiladuthurai District [TM018041]
×
Temple History

தல வரலாறு

பஞ்சரங்க தலங்களுள் திருஇந்தளூர் பரிமளரங்கமாக விளங்குகிறது. மது கைடபன் என்ற அசுரர்கள் வேதங்களைப் பறித்துச் சென்றதனால் இறைவன் மச்சாவதாரம் எடுத்து மது, கைடபர்களை வதம் செய்து வேதங்களை மீண்டும் பெற்றுத்தந்தார். வேதங்களுக்கு அசுர சம்பந்தத்தாலேற்பட்ட மாற்றத்தைப் போக்கி நல்ல மணத்தை பரிமளம் உண்டு பண்ணியமையால் பரிமள ரெங்கநாதர் என இறைவன் அழைக்கப் பெறுகின்றனர். வேதங்களுக்கு பரிமளத்தைத் கொடுத்தத் தலமானபடியால் இங்குள்ள மூலஸ்தான விமானத்திற்கு வேதாமோத விமானம் என்ற பெயர் வழங்குகிறது. காவிரித்தாயார் கங்கையைக் காட்டிலும் சிறப்புப்பெற வேண்டுமென்று இத்தலத்தில் தவமியற்ற அவ்வண்ணமே உனது கரை மருங்குகளிலே நான் திருக்கோயில் கொண்டு உனக்குப் புண்ணியத்தை தருகிறேன் எனக்கூறி திருவரங்கப்பட்டினம், திருவரங்கம், அப்பாலரங்கம் கோயிலடி, திருகுடந்தை மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என ஐந்து தலங்களில் சிறப்பாக...

தல பெருமை

கோயில் வழிபாடு முறை. முதலில் துவஜஸ்தம்பத்தில் கொடிமரம் நமஸ்காரம் செய்துவிட்டு அப்படியே ஸ்ரீராமர் சன்னதி சென்று பெரியபிரகாரம் சென்று ஸ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்து வைகுண்ட ஏகாதசி மண்டபம் வழியாக துவஜஸ்தம்பம் வழியாக பிரதட்சனமாக கருடனை சேவித்து பிறகு கட்டகோபுரம் சென்று துவாரபாலகர் முன்பு சேவித்து விட்டு ஆழ்வார் சன்னதி சென்று சேவித்து விட்டு சக்கரத்தாழ்வார் சன்னதி சேவித்து பிறகு பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமான வேதாமோதவிமானம் சேவித்த பிறகு ஸ்ரீபரிமளரங்கநாயகியை சேவித்து உட்பிரகாரம் சென்று ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசேனைமுதலியார், ஸ்ரீநரசிம்மன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், சேவித்துவிட்டு துவார பாலகர்கள் சேவித்து பிறகு உட்சந்நிதி ஸ்ரீபரிமளரெங்கனை சேவிக்க வேண்டும.