அருள்மிகு பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், Pandhanallur - 609807, தஞ்சாவூர் .
Arulmigu Pasupatheeswara Swamy Temple, Pandhanallur - 609807, Thanjavur District [TM018043]
×
Temple History
தல பெருமை
ஸ்ரீ பசுபதீஸ்வரசுவாமி திருக்கோயில் பந்தநல்லூர் திருத்தல வரலாறு
அண்டங்கள் அனைத்தையும் படைத்துக் காத்துக் திருவிளையாடல் செய்பவன் பரம்பொருள் அவனது உடலிடம் பிரியாத அம்பிகைக்கு பந்து ஆடுதலில் விருப்பம் தோன்றியது, இறைவனை வேண்டினாள் இறைவி. உலக முதல்விக்கு சாதாரணமான பந்துகளைக் கொடுக்கமுடியுமோ? எம்பெருமான் சிந்திக்கிறார் ஏற்ற பந்துகளாக நான்கு வேதங்களையும் நல்ல பந்துகளாக்கி நாதன் அளிக்கிறார் அவற்றைக் கொண்டு திருக்கயிலையிலே பராசக்தி தோழியருடன் பந்தாடலில் ஈடுபட்டு இன்புறுகின்றான் மாலை வேலையில் அன்னையும் தோழியுருடன் பந்தாடலில் தம்மை மறந்தனர். விளையாட்டே முமுவதும் ஆயினர் சூரியனோ இந்த அரிய விளையாட்டிற்கு இடர் விளைவிக்க விரும்பவில்லை அத்தமன கிரியில் மறையாமல் நெடும் பொழுது வானவீதியில் நிலைத்ததான். விளையாட்டு வளர்ந்தது பகல்பொழுதும் நீண்டு...ஸ்ரீ பசுபதீஸ்வரசுவாமி திருக்கோயில் பந்தநல்லூர் திருத்தல வரலாறு
அண்டங்கள் அனைத்தையும் படைத்துக் காத்துக் திருவிளையாடல் செய்பவன் பரம்பொருள் அவனது உடலிடம் பிரியாத அம்பிகைக்கு பந்து ஆடுதலில் விருப்பம் தோன்றியது, இறைவனை வேண்டினாள் இறைவி. உலக முதல்விக்கு சாதாரணமான பந்துகளைக் கொடுக்கமுடியுமோ? எம்பெருமான் சிந்திக்கிறார் ஏற்ற பந்துகளாக நான்கு வேதங்களையும் நல்ல பந்துகளாக்கி நாதன் அளிக்கிறார் அவற்றைக் கொண்டு திருக்கயிலையிலே பராசக்தி தோழியருடன் பந்தாடலில் ஈடுபட்டு இன்புறுகின்றான் மாலை வேலையில் அன்னையும் தோழியுருடன் பந்தாடலில் தம்மை மறந்தனர். விளையாட்டே முமுவதும் ஆயினர் சூரியனோ இந்த அரிய விளையாட்டிற்கு இடர் விளைவிக்க விரும்பவில்லை அத்தமன கிரியில் மறையாமல் நெடும் பொழுது வானவீதியில் நிலைத்ததான். விளையாட்டு வளர்ந்தது பகல்பொழுதும் நீண்டு கொண்டே போயிற்று.
உலகங்கள் சோர்ந்தன பகற்பொழுது நீண்டதால் உலகிற்கு உண்டாகிய துன்பத்தை எடுத்துரைக்க சென்ற நாரத முனிவரையும் நாயகி நோக்கவில்லை, நாயகனாகிய எம்பிரானையும் பார்ககவில்லை விளையாட்டு விருப்பத்தில் அன்னையின் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றம் ஐயனுக்கு சினத்தை விளைவித்தது தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே மாறிவிட்டாளே அம்பிகை பெருமான் காலனை உதைத்த திருக்காலால் பந்தை உதைத்தார், மண்ணுலகிற்கு வந்து வீழ்ந்து பந்து பந்தாடல் பயின்ற பராசக்தி உணர்ந்தாள் நடந்து உணர்ந்து வருந்தி இறைவன் திருமுன் சென்று தொழுது மன்னிப்பு வேண்டினாள். ஒறுப்புப் பெற்றாள். இறைவனின் ஆனைப்படி பசுவாக மாறிச் மண்ணுலகிற்கு போந்தாள் பந்து வந்து வீழ்ந்தணைந்த கொன்றைக் காட்டில் வந்தவள் சரக்கொன்றைக் மரநிழலில் சுயம்பு லிங்கமாய் இருந்து புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிப்பட்டாள்.
திருமால் கேசவனாகிய திருவுருவாய்க் கோவலனாயினன் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் அம்பிகை பசுவுருவிலும், திருமால் கோவலனாகவும் இருந்து வந்தனர், கண்ணுவமுனிவர் பூசைக்கு பால் குறைந்து போயிற்று, சுயம்பு மூர்த்தியின் மீது நாள்தோறும் பாலைச் சொரிந்து வந்தமை அறிந்த கேசவன் கோலால் அடித்தான், பசு துள்ளிப் புற்றை மிதித்தது அன்னை தன் உருவம் கொண்டாள் கேசவன் கோவலன் வடிவம் நீக்கி, ஆதிக்கேசவப் பெருமாள் ஆகி, அருகில் திருக்கோயில் கொண்டான்.
அன்னை வடக்கு நோக்கி அமைந்து பெருமானை அடையும் தவக்கோலம் மேற்கொண்டாள். இறைவனும் இறைவியின் தவத்தினை ஏற்று, தேவர், முனிவர் யாவரும் கண்டு களிப்பத் திருமணம் செய்துகொண்டு கல்யாண சுந்தரனாய்க் காட்சி அளித்தான், பசுபதீஸ்வராகச் சிவலிங்கக் கோலம் கொண்டு, பந்தணைந்த சுவடும், பசு மிதித்ததனால் உண்டாகிய குளம்புச் சுவடும் தன்மீது அன்பின் அடையாளங்களாகக் கொண்டான்.