கி.பி.1614 முதல் 1640 வரை தஞ்சையை ஆண்டு வந்த நாயக்க மன்னரான இரகுநாத நாயக்கர் ஒரு சிறந்த இராம பக்தர். இவரது அமைச்சராக சிறந்து விளங்கியவர் கோவிந்த தீட்சிதர் என்பவர். இவரை கோவிந்த அய்யன் என்றும் அழைப்பது உண்டு. குடந்தையில் உள்ள அய்யன் தெரு, தஞ்சையில் உள்ள அய்யன் குளம், குடந்தைக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை முதலானவை இவரால் அமைக்கப் பற்றவையேயாகும். அவற்றுள் ஒன்றுதான் குடந்தை அருள்மிகு இராமசாமி திருக்கோயிலாகும். இப்பெருமைமிகு நாயக்க மன்னர் குடந்தைக்கு மேற்கிலுள்ள தாராசுரத்தில் ஒரு குளம் வெட்டினார். அந்தகுளம் வெட்டும் போது ஸ்ரீராமன், சீதை வடிவங்கள் கிடைத்தன. இது ராம பக்தரான இரகுநாத நாயக்கருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. அதன் பயனே திருக்குடந்தையில் அருள்மிகு இராமசாமி...கி.பி.1614 முதல் 1640 வரை தஞ்சையை ஆண்டு வந்த நாயக்க மன்னரான இரகுநாத நாயக்கர் ஒரு சிறந்த இராம பக்தர். இவரது அமைச்சராக சிறந்து விளங்கியவர் கோவிந்த தீட்சிதர் என்பவர். இவரை கோவிந்த அய்யன் என்றும் அழைப்பது உண்டு. குடந்தையில் உள்ள அய்யன் தெரு, தஞ்சையில் உள்ள அய்யன் குளம், குடந்தைக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை முதலானவை இவரால் அமைக்கப் பற்றவையேயாகும். அவற்றுள் ஒன்றுதான் குடந்தை அருள்மிகு இராமசாமி திருக்கோயிலாகும். இப்பெருமைமிகு நாயக்க மன்னர் குடந்தைக்கு மேற்கிலுள்ள தாராசுரத்தில் ஒரு குளம் வெட்டினார். அந்தகுளம் வெட்டும் போது ஸ்ரீராமன், சீதை வடிவங்கள் கிடைத்தன. இது ராம பக்தரான இரகுநாத நாயக்கருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. அதன் பயனே திருக்குடந்தையில் அருள்மிகு இராமசாமி திருக்கோயில் எழுந்தது.
ஸ்ரீ ராமரும், சீதையும் ஒரே பீடத்தில் அமைந்துள்ள சிறப்பும், பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளியுள்ள காட்சியும் இந்த ஒரு தலத்தில் தான் உணர முடியும். ஸ்ரீ ராமபிரானின் கம்பீரத் தோற்றமும், சீதாதேவியின் அருள்நோக்கும் தம்பிமார்களின் பணிவும் தொண்டன அனுமனின் பக்தியும் பரவசமூட்டும் பாங்குடையதாய் அமைந்துள்ள சிறப்பு காணக் கிடைக்காத ஒன்றாகும். மேலும் ஸ்ரீ அனுமன் ஒரு கையில் வீணையும், மறுகையில் ,ராமபாராயண நலையும் கொண்டு அமர்ந்த கோலத்தின் உள்ளது தனிச் சிறப்பாகும்.
தல பெருமை
ஸ்ரீயபதியான பரந்தாமன் இப்பூவுலகில் பல இடங்களில் கோயில் கொண்டிருக்கிறான். அவற்றுள் தலத்தினாலும், தீர்த்தத்தினாலும் பெருமை கொண்டது திருக்குடந்தை மாநகர். நலத்தால் மிக்கார் குடந்தை எனவும், திசையில் வீசும் செழுமாமணிகள் சேரும் திருக்குடந்தை எனவும் ஆழ்வார்களால் போற்றப்படுகிறது. பிரம்மா முதலிய தேவாதி தேவர்களும் பூஜித்த தலம் இது. திருமால் இந்நன்னகரில் சாரங்கபாணியாகவும், சக்கரபாணியாகவும், கோதண்டபாணியாகவும் காட்சியளிக்கின்றனர்.ஸ்ரீயபதியான பரந்தாமன் இப்பூவுலகில் பல இடங்களில் கோயில் கொண்டிருக்கிறான். அவற்றுள் தலத்தினாலும், தீர்த்தத்தினாலும் பெருமை கொண்டது திருக்குடந்தை மாநகர். நலத்தால் மிக்கார் குடந்தை எனவும், திசையில் வீசும் செழுமாமணிகள் சேரும் திருக்குடந்தை எனவும் ஆழ்வார்களால் போற்றப்படுகிறது. பிரம்மா முதலிய தேவாதி தேவர்களும் பூஜித்த தலம் இது. திருமால் இந்நன்னகரில் சாரங்கபாணியாகவும், சக்கரபாணியாகவும், கோதண்டபாணியாகவும் காட்சியளிக்கின்றனர்.