கும்பகோணத்தில் ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இங்கு ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருள்பாலிப்பதால் இக்கோவில் தென்னக அயோத்தி என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்