Screen Reader Access     A-AA+
அருள்மிகு கரும்பாயிரம் கொண்ட விநாயகர் திருக்கோயில், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Karumpayiram Konda Vinayagar Temple, Kumbakonam - 612001, Thanjavur District [TM018050]
×
Temple History

தல பெருமை

கரும்பு வியாபாரி ஒருவன் ஆயிரம் கரும்புகளை ஆலய அருகில் நிறுத்தினான். விநாயகர் அருள் புரிய வேண்டி ஒரு பிராமணச் சிறுவனாய் அவதாரம் கொண்டு வணிகனிடம் காசில்லை கரும்பு ஓன்று தாருங்கள் என்று வினவினார். வணிகனோ காசில்லாமல் கேட்காதீர் என்று விரட்டினார். கரும்பை விற்க சென்ற வணிகர் கரும்புசாறு இல்லாமல் சக்கையாக இருப்பதை அறிந்து ஆலயத்திற்குள் சென்று சிறுவனாக வந்ததது விநாயகர் என்பதை அறிந்து தன்பிழையை பொறுத்தருள வேண்டி நின்றான். மீண்டும் கரும்புகள் செழுமையடைந்ததால் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.