அருள்மிகு மகாமாரியம்மன் மற்றும் மகாசுந்தரகாளியம்மன் திருக்கோயில், தேப்பெருமாநல்லூர், திருவிடைமருதூர் - 612206, தஞ்சாவூர் .
Arulmigu Maha Mariyamman and Maha Sundara Kaliamman Temple, Thepperumanallur - 612206, Thanjavur District [TM018053]
×
Temple History
தல வரலாறு
காவேரியில் வந்த காளிதேவி :-
இனி இவ்வூரின் குலதெய்வங்களாக விளங்கும் காளிமாரிதேவியரின் அருட்கதையைக் காண்போம். 15,17,19
முன்னொரு காலத்தில் இவ்வூரில் யாரும் பார்த்தறியாத இளம் பெண்ணொருத்தி ஊருக்குள் நுழைந்து பிரவேசித்தாள். வடக்கு வீதியில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் வந்தமர்ந்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணை அனைவரும் ஏகமாய் சூழ்ந்து நின்று மாறி மாறி கேள்விகள் கேட்டார்கள். அவள் எதுவும் பதில் பேசாது மௌனமாகவே அமர்ந்திருந்தாள், எதிர்பாராமல் திடீரென்று வாய் திறந்து, நான் இவ்வூரிலேயே நிலைத்து விடுவதாக எண்ணி வந்துள்ளேன் என்று சொல்லி விட்டு மௌனமானாள். நீ யாரம்மா எங்கிருந்து வருகிறாய்? என்று அவர்கள் ஆவலோடு கேட்டார்கள், அதற்கு அப்பெண்...காவேரியில் வந்த காளிதேவி :-
இனி இவ்வூரின் குலதெய்வங்களாக விளங்கும் காளிமாரிதேவியரின் அருட்கதையைக் காண்போம். 15,17,19
முன்னொரு காலத்தில் இவ்வூரில் யாரும் பார்த்தறியாத இளம் பெண்ணொருத்தி ஊருக்குள் நுழைந்து பிரவேசித்தாள். வடக்கு வீதியில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் வந்தமர்ந்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணை அனைவரும் ஏகமாய் சூழ்ந்து நின்று மாறி மாறி கேள்விகள் கேட்டார்கள். அவள் எதுவும் பதில் பேசாது மௌனமாகவே அமர்ந்திருந்தாள், எதிர்பாராமல் திடீரென்று வாய் திறந்து, நான் இவ்வூரிலேயே நிலைத்து விடுவதாக எண்ணி வந்துள்ளேன் என்று சொல்லி விட்டு மௌனமானாள். நீ யாரம்மா எங்கிருந்து வருகிறாய்? என்று அவர்கள் ஆவலோடு கேட்டார்கள், அதற்கு அப்பெண் என்னை தெரியவில்லையா உங்களுக்கு? இருக்கட்டும், நீங்கள் போகப் போக தெரிந்து கொள்வீர்கள் நான் யார் என்பதை என்று ஆழ்ந்த அர்த்த்தோடு கூறியவள் புன்னகையோடு வெளியில் வந்தாள், வெளியே வந்தவள் மறைந்து விட்டாள், இந்த அதிசயம் ஊரெங்கும் பரவியது. சில நாட்கள் சென்றன.
இவ்வூருக்கு வடதிசையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் காவிரியாறு உள்ளது. நதியைக் கடந்து அக்கரையில் உள்ள கிராமத்திற்கு இவ்வூரைச் சார்ந்த இருவர் சொந்த அலுவலாக சென்று திரும்புகையில் நதி நீரில் மரப்பெட்டி ஒன்று மிதந்து வருவதைக் கண்டனர்.
உடனே ஆவலோடு எடுத்து தலையில் சுமந்துகொண்டு வந்து ஊரில் திறந்து பார்த்தனர், மரத்தால் செய்யப்பட்ட காளியின் சிரசொன்று அதிலிருப்பதைக்கண்டனர். அக்கணமே அவர்களுக்கு இங்கு நிகழ்ந்த பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. அவ்விளம் பெண் ஊருக்குள் வந்ததும், இங்கேயே நிலைத்து விடப்போகிறேன் என்றும் கூறியதும், என்னை தெரியவில்லையா என்று கேட்டுவிட்டு அர்த்த புன்னகையோடு மின்னலென மறைந்து போனதும் அவர்கள் மனத்திரையில் நாடக்காட்சிபோல் வந்து நின்றன. அதனையும் இதனையும் ஒப்பிட்டு பார்த்து வியப்படைந்து அன்று வந்தவள் ஸ்ரீகாளிதேவியே என்ற மெய்யுணர்வில் அவர்கள் உடலெங்கும் புல்லரிப்பும், புளகாங்கிதமும் ஏற்பட்டது.
அதன் பிறகு தற்போதுள்ள திருக்கோயிலை ஊர்மத்தியில் ஊர்மக்கள் அனைவரும் கூடி புதியதாக எழுப்பினர் அங்கு காளிதேவியை அவள் நீரில் வந்த திசை நோக்கி வடக்கிலும் தனியாக வந்தவளுக்கு துணையாக காளியின் அம்சத்தோடு பொருத்தமுடைய மாரிதேவியை கிழக்கு நோக்கியும் ஸ்தாபனம் செய்தும் வழிபட்டு வருகின்றனர்.
இத்தேவியரைப்பற்றி எழுந்த சுந்தரவள்ளி அந்தாதி என்னும் நூல் இதனை
மாதவச் செல்வி நீரில் வந்தாள் பொன்னி
சீதளநதி யிலென சேதியொன்று இவ்வூரிலுண்டு
சீற்றமும் சம்கார நாட்டமில்லா குளிர்
ஊற்றான வளெங்கள் ஒப்பிலாக் காளி
என்று குறிப்பிடுகிறது. தமக்கையும் தங்கையும் ஸ்ரீ சுந்தர மகாமாரியம்மன் ஸ்ரீ சுந்தர மகாகாளியம்மன் அருளாட்சி செய்து வருகின்றனர். இத்தேவியர் இருவரையும் பாட்டுடைத்தலைவியராகக் கொண்டு எழுதப்பட்ட நூலே...சுந்தரவள்ளி அந்தாதி என்பதாகும்.