கும்பகோணத்திலிருந்து 6 கி.மீட்டர் தொலைவில் தேப்பெருமாநல்லூரின் மையப்பகுதியில் பிரதான போக்கு வரத்து சாலையின் அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சிறப்பு :- இழையணி சிறப்பின்பழையோள் என்றும் காடுகிழாள், மாதங்கி, சண்டி, நீலி சூலி, சாமுண்டி, ஐயை என்றெல்லாம் நம் இலக்கியங்களில் பேசப்படுகின்ற ஸ்ரீ மகாமாரி தேவை மற்றும் ஸ்ரீ காளிதேவி ஆகிய இருதேவியரும் இங்குள்ள மக்களின் இருவிழிகளாகவும், குலதெய்வங்களாகவும் விளங்குகின்றனர். சிமிழ் போன்ற சிறிய கோயிலில் இருதேவியருக்கும் இரு கருவறைகள் அருள்மிகு சுந்தர மகாமாரியம்மன் கிழக்கு திசை நோக்கியும், அருள்மிக சுந்தர மகா காளியம்மன் வடக்கு திசை நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.