அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், கும்பகோணம் - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Kasiviswanathar Temple, Kumbakonam, Kumbakonam - 612001, Thanjavur District [TM018054]
×
Temple History
தல பெருமை
பழமையான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இத்திருக்கோயிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழாரால் பாடல்பெற்ற திருத்தலமாகும். குடந்தைக்காரோணம் என்ற பெயர் பெற்ற திருத்தலமாகும்.
கங்கை யமுனை நருமதை சரஸ்வதி காவேரி கோதாவரி துங்கபத்ரா கிருஷ்ணா சரயு என்ற ஒன்பது நதித்தலைவியரும் கயிலை சென்று உமாபதியை தரிசித்தனர். மகாமகத்திருக்குளத்தில் நீராடி பாபவிமோச்சனம் பெறும்படி அருளினார். நவகன்னியர் அத்தலம் இடம் அறியோம் எனக்கூற அவர்களை காசிக்கு செல்லும்படி அருளினார். பின்பு அவர்களுக்கு காசியில் தரிசனம் கொடுத்து தமது பரிவாரங்கள் சூழ குடந்தைக்கு அழைத்து வந்து முறையாக நீராடச் செய்தார். காசியில் இருந்து வந்தமையால் இவருக்கு காசிவிசுவநாதர் எனத்திருநாமம் ஏற்பட்டது.
இத்திருக்கோயிலில் இந்தியாவில் உள்ள 9 ஜீவ நதிகளும் தனி சன்னதியில் ஒருங்கே அமையப்பெற்று உள்ளது. உலகத்தில்...பழமையான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இத்திருக்கோயிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழாரால் பாடல்பெற்ற திருத்தலமாகும். குடந்தைக்காரோணம் என்ற பெயர் பெற்ற திருத்தலமாகும்.
கங்கை யமுனை நருமதை சரஸ்வதி காவேரி கோதாவரி துங்கபத்ரா கிருஷ்ணா சரயு என்ற ஒன்பது நதித்தலைவியரும் கயிலை சென்று உமாபதியை தரிசித்தனர். மகாமகத்திருக்குளத்தில் நீராடி பாபவிமோச்சனம் பெறும்படி அருளினார். நவகன்னியர் அத்தலம் இடம் அறியோம் எனக்கூற அவர்களை காசிக்கு செல்லும்படி அருளினார். பின்பு அவர்களுக்கு காசியில் தரிசனம் கொடுத்து தமது பரிவாரங்கள் சூழ குடந்தைக்கு அழைத்து வந்து முறையாக நீராடச் செய்தார். காசியில் இருந்து வந்தமையால் இவருக்கு காசிவிசுவநாதர் எனத்திருநாமம் ஏற்பட்டது.
இத்திருக்கோயிலில் இந்தியாவில் உள்ள 9 ஜீவ நதிகளும் தனி சன்னதியில் ஒருங்கே அமையப்பெற்று உள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் பாவங்களிலிருந்து போக்கிட வேண்டி, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாநாளில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் வரும் மாசிமகமாகிய பௌர்ணமி நாளில் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான மகாமகத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
எனவே உலக மக்கள் அனைவரும் இத்திருக்கோயிலிற்கு வந்து அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி மற்றும் அருள்மிகு நவகன்னியர்களை வழிபட்டால் தங்கள் பாவங்கள் போய் விடும் என்றும், மறைந்த முன்னோர்களுக்கு மகாமகத்திருக்குளத்தில் திதி கொடுத்து தங்கள் பித்ருபாவங்களை போக்கிக் கொள்ளலாம் என்பது ஐதீகம். மகாமகத்திருக்குளத்தை ஒரு முறை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் தங்களது தாய் வழியில் 7 தலைமுறைகள் மற்றும் தந்தை வழியில் 7 தலைமுறைகள் செய்த பாவங்கள் நீங்கும்.