பழமையான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இத்திருக்கோயிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழாரால் பாடல்பெற்ற திருத்தலமாகும். குடந்தைக்காரோணம் என்ற பெயர் பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் இந்தியாவில் உள்ள 9 ஜீவ நதிகளும் தனி சன்னதியில் ஒருங்கே அமையப்பெற்று உள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் பாவங்களிலிருந்து போக்கிட வேண்டி, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாநாளில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் வரும் மாசிமகமாகிய பௌர்ணமி நாளில் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான மகாமகத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். எனவே உலக மக்கள் அனைவரும் இத்திருக்கோயிலிற்கு வந்து அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி மற்றும் அருள்மிகு நவகன்னியர்களை வழிபட்டால்...