Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் (ம) லெட்சுமிநாராயண பெருமாள் திருக்கோயில், உடையாளூர், Udayalur - 612804, தஞ்சாவூர் .
Arulmigu Kailasanathar Lakshminarayana Perumal Temple, Udayalur, Udayalur - 612804, Thanjavur District [TM018057]
×
Temple History

தல பெருமை

சரும நோய் தீர்க்கும் சதாசிவன் அஜமகாராஜன், அயோத்தி நகரப் பேரரசர். ஒரு நடுநிசியில் அவர் ஓ... என ஓலமிட்டு விதிர்த்தெழுந்தார். அருகில் உறங்கியிருந்த ராணியார் திடுக்கிட்டு எழுந்து, தீப்பந்த வெளிச்சத்தில் மன்னரின் முகம் பார்த்து அதிர்ந்தார். கைகால்கள் முறுக்கியது போலாகி, உடல் கறுத்துக் கிடந்தார், அஜமகாராஜர். அயோத்தி முழுதும் வாயுவை விட வேகமாக இந்த விஷயம் பரவியது. ராஜவைத்தியர்கள் அணிவகுத்து நின்றார்கள். உடல் முழுதும் அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு சோதித்தார்கள். மூலிகைகளையும், மருந்துகளையும் மாறி மாறி கொடுத்தார்கள். நாழிகைகளும், நாட்களுமாக கடந்ததே தவிர நோய் அகல மறுத்தது. மகாராணியார் சந்திரமுகி, சிவபக்தியில் சிவந்தவள். கணவனுக்கருகே கண் மூடி ஈசனின் நாமத்தை ஓயாது ஜபித்துக் கொண்டிருந்தாள். ராஜவைத்தியம் தோற்றுப் போனது. தேவனின் வைத்தியம்தான்...