கி.பி.1118க்கு முன்பு இத்திருக்கோயில் கட்டப்பட்டது. இது சிவபாதசேகரமங்கலம் என்றும், சுவாமியின் பெயர் சிவபாதசேகரமுடையார் என்றும் வழங்கப்படுகிறது. திருக்கோயில் பாற்குளத்தை நாயன்மார்கள் பாடியுள்ளார்கள். முதல் குலோத்துங்கன் மற்றும் சுந்தரபாண்டியன் பற்றிய கல்வெட்டுகள் இங்கே உள்ளது. இங்கு திருமடம் இருந்துள்ளது. அதை பசுபதசைவர் என்பவர் நிர்வகித்துள்ளார். தோல்நோய்கள் மக்கள் இங்கு வந்து திருக்கோயில் திருக்குளத்தில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்தால் நோய்கள் சரியாகும் என்று நம்பப்படுகிறது.