Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஒழுகைமங்கலம், Erukkatancherri - 609307, மயிலாடுதுறை .
Arulmigu Mariyamman Temple, Ozhugaimangalam, Erukkatancherri - 609307, Mayiladuthurai District [TM018059]
×
Temple History

தல வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறையில் இருந்து தென் கிழக்கே சுமார் 30 கிமீ தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து மேற்கே 2 கிமீ தொலைவிலும் சிதம்பரம்-வேளாங்கண்ணி சாலை அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.ஒழுகைமங்கலம் என பெயர் வரக் காரணம் அம்மாள் உலக மக்கள் நலம் பெற வேண்டி தவமிருந்து அருள் வழங்கும் தலமாதலால் உலகமங்கலம் என வழங்கப்பட்டு அதுவே மருவிஒழுகைமங்கலம் என அழைக்கப்படுகிறது.மாரியம்மன் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம் பசும் பால் சொரிந்து , பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால் , ஊருக்கு ஒழுகைமங்கலம் என பெயர் அமைந்ததாக சொல்கின்றனர்.ஆடி பெருக்கு நாளில் , கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். உற்சவரான...