மாரியம்மன் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம் பசும் பால் சொரிந்து , பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால் , ஊருக்கு ஒழுகைமங்கலம் என பெயர் அமைந்ததாக சொல்கின்றனர்.ஆடி பெருக்கு நாளில் , கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். உற்சவரான சீதளா பரமேஸ்வரி , காத்தவராயன் , பேச்சியம்மன் , கருப்பன் ஆகியோர் தனிசன்னதிகளில் காட்சி தருகின்றார். கோயிலின் தீர்த்தக் குளத்தில் , சர்க்கரை மற்றும் உப்பு கரைத்து பிரார்த்தித்தால் , உடலில் உள்ள கட்டி போன்றவையும் மனக் கஷ்டங்களும் விரைவில் கரைந்து காணாமல் போகும் கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைக்கூடும் , தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை...