Arulmigu Subramaniya Swamy Temple, Thiruvidaikazhi - 609310, Mayiladuthurai District [TM018061]
×
Temple History
தல வரலாறு
தலவரலாறு
திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது.
அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற...தலவரலாறு
திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது.
அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு விடைக்கழி என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.
முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.
இத்திருத்தலத்தில் சர்வமும் சுப்ரமணியம் என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, கோவில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் மட்டுமே காட்சி தருவார். ஆனால், இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகப்பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தல பெருமை
ஸ்தல வரலாறு
மயிலாடுதுறை மாவட்டம் , தரங்கம்பாடி வட்டம் , திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , திருக்கடையூர் ஸ்தலத்திற்கு தென்மேற்கிலும் , தில்லையடி (வள்ளியம்மை நகர்) ஸ்தலத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. முற்காலங்களில் சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்பட்டதும் , தற்காலங்களில் திருக்குராவடி என போற்றப்படுகின்றது .
அருணகிரி நாதர் சுவாமிகள் திருப்புகழும் ,சேந்தனார் சுவாமிகள் திருவிசைப்பாவும் போற்றி பாடிய ஸ்தலம் ,...ஸ்தல வரலாறு
மயிலாடுதுறை மாவட்டம் , தரங்கம்பாடி வட்டம் , திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , திருக்கடையூர் ஸ்தலத்திற்கு தென்மேற்கிலும் , தில்லையடி (வள்ளியம்மை நகர்) ஸ்தலத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. முற்காலங்களில் சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்பட்டதும் , தற்காலங்களில் திருக்குராவடி என போற்றப்படுகின்றது .
அருணகிரி நாதர் சுவாமிகள் திருப்புகழும் ,சேந்தனார் சுவாமிகள் திருவிசைப்பாவும் போற்றி பாடிய ஸ்தலம் , சேந்தனார் சுவாமிகள் முக்தி பெற்றதும் இத்திருத்தலத்திலேயே .
திருச்செந்தூரிலே முருகப்பொருமான் சூரனை வதை செய்து அழித்தபின் , அவனுடைய இரண்டாவது குமாரன் இரண்யாசூரன் மட்டும் தப்பித்து சுறா ( மகர ) மீன் உருவில் கீழ சமுத்திரத்தில் மறைந்துள்ளதாக தெரியவர , தெய்வானையை அம்பிகையை திருமணம் செய்ய திருப்பரங்குன்றம் சென்று காத்திருக்க கூறிவிட்டு , கீழசமுத்திரம் சென்ற குமரப்பெருமானுக்கு எந்த சுறாமீன் உருவில் மறைந்துள்ளென அறிய இயலாமல் தயங்கி நிற்க குமரனுடைய தாயார் பார்வதி அம்மையார் தயங்கி நிற்பதை அறிந்து , அம்மையார் ஞானோபதேசம் செய்ய மறைந்திருந்த இரண்யாசூரனை வதை செய்து அழித்தாரென வரலாறு .
குமரப்பெருமான் தயங்கி நின்ற இடமே தயங்கம்பாடியென பெயரேற்றபட்டு பிற்காலங்களில் தரங்கம்பாடியென பெயரேற்றபட்டது . மறைந்திருந்த இரண்யாசூரனை வதை செய்து அழித்ததால் குமரப்பெருமானுக்கு தோஷம் ஏற்பட திருவிடைக்கழியாகிய இவ்விடம் சென்று திருக்குரா மரத்தின்கீழ் சிவனை பூஜித்து வழிபட தாயார் உபதேசம் கூற , அவ்வாறு வந்த முருகப்பொருமான் திருக்குரா மரத்தின்கீழ் சிவனை பூஜித்து வழிபட சிவன் காட்சி கொடுத்து தோஷம் நீங்க பெற்றாய் என ஆசீர்வதித்து நீ முன் நின்று விளங்கி தோஷத்தை நீக்குமாறும் உனக்கு பின்னாலிருந்து உறுதுனையாக இருக்கிறேன் எனக்கூறி சிவன் தன்னுடைய ஸ்தானத்தை முருகனுக்கு விட்டு கொடுத்து இவருக்கு பின்னால் சற்று ஒதுங்கி ஒரே கருவறையில் விளங்குகின்றார்கள் ,
தெய்வானை இவ்விடத்தில் தனிசன்னதியில் சற்று சிரம்(தலை) மேற்குநோக்கி சாய்ந்த நிலையில் தெற்கு நோக்கி விளங்கி காட்சி தருகின்றார் .தெய்வானை சன்னதியுள்ள இவ்விடத்தில் வள்ளி சன்னதியில்லை , சிவன் சன்னதியுள்ள இவ்விடத்தில் பார்வதி சன்னதியில்லை , நவக்கிரக சன்னதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இவ்வாலயத்திற்கேதிரே