அருள்மிகு சித்தநாதர்சுவாமி திருக்கோயில், திருநறையூர், Kumbakonam - 612602, தஞ்சாவூர் .
Arulmigu Sithanathaswamy Temple, Thirunaraiyur, Kumbakonam - 612602, Thanjavur District [TM018074]
×
Temple History
தல வரலாறு
சௌந்தரநாயகி சமேத அருள்மிகு சித்தநாதசுவாமி திருக்கோயில்
ஸ்ரீ குபேர மழலை மஹாலெட்சுமி அவதார திருத்தலம்
- துர்வாச முனிவர் இத்தலத்தில் சித்தநாதரை பூசித்து வழிப்பட்டதால் அவருக்கு சாபங்கள் எல்லாம் நீங்கி முக்தி பெற்ற ஸ்தலம்.
- நாராயணன், நாராயண பஷி ரூபமாய் எழுந்தருளி பெருமாளை பூசித்து சாபம் நீங்கியதால் இத்தலத்திற்கு நறையூர் என பெயர் பெற்றது.
- பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் வெகுகாலம் தவம் செய்த தேவர்களால் பெற்ற சாபங்கள் நீங்கியதால் இத்தல பெருமானுக்கு சித்தநாதர் எனும் திருநாமனும், இத்தலத்திற்கு சித்தீச்சரம் என்றும் பெயர் பெற்றதாகும்.
- மேதாவி மகரிஷி பலகாலம் தவம்செய்தது இங்குதான்.அதுமட்டும் இல்லாமல் இத்தலம் அருகிலுள்ள வஞ்சித்தடாகம் சித்தாம்ரு தடாகம் எனும் குளத்தில் மகரிஷி தவம் செய்தலால் ஸ்ரீ சித்தநாதர் பிரசின்னமாகி என்ன...சௌந்தரநாயகி சமேத அருள்மிகு சித்தநாதசுவாமி திருக்கோயில்
ஸ்ரீ குபேர மழலை மஹாலெட்சுமி அவதார திருத்தலம்
- துர்வாச முனிவர் இத்தலத்தில் சித்தநாதரை பூசித்து வழிப்பட்டதால் அவருக்கு சாபங்கள் எல்லாம் நீங்கி முக்தி பெற்ற ஸ்தலம்.
- நாராயணன், நாராயண பஷி ரூபமாய் எழுந்தருளி பெருமாளை பூசித்து சாபம் நீங்கியதால் இத்தலத்திற்கு நறையூர் என பெயர் பெற்றது.
- பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் வெகுகாலம் தவம் செய்த தேவர்களால் பெற்ற சாபங்கள் நீங்கியதால் இத்தல பெருமானுக்கு சித்தநாதர் எனும் திருநாமனும், இத்தலத்திற்கு சித்தீச்சரம் என்றும் பெயர் பெற்றதாகும்.
- மேதாவி மகரிஷி பலகாலம் தவம்செய்தது இங்குதான்.அதுமட்டும் இல்லாமல் இத்தலம் அருகிலுள்ள வஞ்சித்தடாகம் சித்தாம்ரு தடாகம் எனும் குளத்தில் மகரிஷி தவம் செய்தலால் ஸ்ரீ சித்தநாதர் பிரசின்னமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்க மகரிஷி பக்தி நெறியோடு ஸ்ரீ மகாலெட்சுமி தேவியே தனக்கு குழந்தையாய் பிறக்க வேண்டும் என வேண்ட இத்திருத்தலத்தில் ஸ்ரீ குபேரனுக்கு அருள்புரிபவளான ஸ்ரீ மகாலெட்சுமியே மழலையாய் பிறந்தாள். ஸ்ரீ மகாலெட்சுமி தேவி வளர்ந்து தக்க வயது அடைந்ததும் ஸ்ரீ மேதாவி மகரிஷி அவருக்கு திருமணம் செய்வித்தார். ஸ்ரீபார்வதி தேவியும், பரமேஸ்வரரும் சேர்ந்து ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்த மகா சக்தி வாய்ந்த ஸ்தலம்.