தல வரலாறு

சோழவள நாட்டில் கும்பகோணம் மாநகருக்கு மேற்கு திசையில் உள்ள சுந்தரபெருமாள்கோயில் கிராமத்தில் நடுநாயகமாக திகழ்வது அருள்மிகு சௌந்தரராஜபெருமாள் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலினை மையமாகக் கொண்டு அருகே உள்ள மணவாளன்பேட்டை எனும் கிராமத்தில் வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள் புரிந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் தெய்வமாகத் திகழ்வது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் திருப்பணி வேலைகள் கிராம பக்தர்களால் அம்பாளின் அருளுக்கிணங்க நடைபெற்று வருகிறது. கிராம எல்லையில் காவல் தெய்வமாக திகழும் அய்யனார் கிராம மக்களின் உடல் உபாதைகளை நீக்கி அருள் புரிந்து காத்து வருகின்றார்.