தல வரலாறு

இத்தலத்து இறைவனை பிரமனும், இராமனும் வந்து வழிபட்டுய்ந்தனர் என்று கூறுவர். குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கத்தினைக் கொண்டு வராமல் தாமதத்தினால் இராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார் என்றும் அதுவே இப்பொழுதுள்ள பிருதிவிலிங்கம் என்றும், அனுமன் பின்னர் கொண்டு வந்த லிங்கமே கோயிலின் இடப்புறம் அமைந்துள்ள அனுமந்தலிங்கம் என்ற பெயரால் வைக்கப்பட்டது என்றும் கூறுவர். மற்றுமொரு வரலாறு இத்தலத்தில் வழங்கி வருகின்றது. ஒரு வணிகன் தன் சிற்றன்னையை அறியாது புணர்ந்தமையால் அவனுக்கு உண்டாய தொழு நோய், இத்தலத்து இறைவனை வணங்கியமையால் நீங்கப்பெற்றது என்று கூறுவர்.