தல வரலாறு
ஸ்ரீ சம்பந்தர் சித்தர்காட்டில் தங்கி ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகளின் சீடராக பணிபுரிந்து வந்த போது இறைவனிடம் முக்தி வேண்டி வணங்கி நின்றதில் இறைவனானவன் அசரீரியாக ஆலமரங்கள் நிறைந்துள்ள இடத்தில் இருக்கும் சிவலிங்கத்தை பூஜை செய்து வந்தால் அங்குள்ள ஒரு பட்டு போன மரம் என்று துளிர் விடுகிறதோ அன்று நீர் முக்தி அடைவீர் என கூறியதை தொடர்ந்து அவ்வாறே தொடர்ந்து வழிப்பட்டு முக்தியடைந்த இடம் இந்த ஆலந்துறையப்பபர் திருக்கோயில்.