Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிற்றம்பல நாடியார் திருக்கோயில், சித்தர்காடு, Sitharkadu - 609003, மயிலாடுதுறை .
Arulmigu Sitrampala Nadiyar Temple, Sitharkadu - 609003, Mayiladuthurai District [TM018209]
×
Temple History

தல வரலாறு

சைவஞான பரம்பரை ஆசாரிய மரபு, சந்தான மரபு என இரு வகைப்படும். சமயாச்சாரியார்களும், சந்தனாச்சாரியார்களும் சைவ சமயத்தை இவ்வுலகில் நிலைபெறச் செய்த பெருமைக்குரியவர்கள். இவர்களில் சந்தனாச்சாரியர்கள் திருமரபு இந்நாட்டில் சைவ ஆதீனங்களாக விளங்கி சைவ சமய உண்மைகளை மக்களுக்கு உணர்த்தி நன்னெறிப்படுத்தி வருகின்றது. திருக்கயிலாய மலையிலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகண்ட பரமசிவனிடத்தில் உபதேசம் பெற்றவர் திருநந்திதேவர். திருநந்திதேவரிடம் உபதேசம் பெற்றவர் சனகர், சனந்தநர், சனாதநர், சனற்குமாரர் என்னும் சனகாதிநால்வர், சனற்குமாரரிடம் உபதேசம் பெற்றவர் சத்தியஞான தரிசினிகள். சத்தியஞான தரிசினிகள் உபேதசம் பெற்றவர் பரஞ்சோதி மாமுனிவர். திருந்நதிதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி மாமுனிகள் ஆகிய நால்வரும் கயிலாய வாசிகள், தேவபரம்பரை, அகச்சந்தானம் எனப் பெயர் பெற்றவர்கள். திருக்கயிலாயத்தில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் ஒரு...