மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சித்தர்காடு கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சித்தர்காட்டில் காழி சிற்றம்பல நாடிகளும், அவரது சீடர்களும் தங்கி இருந்து கொண்டு தவநிலை மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தவச்சாலையாக விளங்கிய தலம் தான் இந்த ஆலயத்திற்கு மேற்கே உள்ள சம்பந்தர் ஆலயம்.