Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Adhipeeda Parameshwari Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001825]
×
Temple History

தல பெருமை

ஆதிகாமாட்சியின் தோற்றம் (ம) இத்திருக்கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.கயிலாயத்தில் சிவபெருமானின் இருகண்களை பார்வதி தன்னுடைய கரங்களினால் பொத்தியதால்,பூலோகம் இருண்டு பாவம் பெருகி கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது.இதனால் உலக இயக்கமே நின்று போய்விட்டது.இதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகாரமாக,அன்னை பார்வதி பூமியில் காசியில் அவதரித்து விட விருட்சத்தின் கீழ் இருந்து பூஜை செய்து அன்னபூரணியாய் தோன்றி அன்னதானம் செய்து வந்தாள்.பல்வேறு தானதர்மங்கள் செய்தும் ஈசனை அடையமுடியாதலால் மனம் சோர்ந்து காஞ்சித்தலத்திற்கு சென்று மணலை லிங்கமாக வைத்து பூஜை செய்தால் கயிலாயம் அடையலாம் என அறிந்து தேவி இங்கு ஆதியில் வந்து தங்கியதால் ஆதிகாமாட்சி எனவும்,காபாலிகள் பூசை செய்து பலி கொடுத்ததால் காளி எனவும்,ஆதிசங்கரர் அம்மனுடைய உக்கிரத்தை தனித்ததாலும் ஆதிபீடாபரமேசுவரி...

புராண பின்புலம்

இத்திருத்தலம் 3500 ஆண்டுகள் பழமையானது. தொண்டை மண்டலம் முதல் சோழர்,பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. மாமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது கல்வி மற்றும் கலைகளின் களஞ்சியமாகவும் ,ஆன்மீக சிறப்புமிக்க சைவ, வைணவ ஆலயங்கள் நிறைந்துள்ள கச்சித்தளியாம் நகரேஷீ காஞ்சி மாநகர்தனில் திருவேகம்பத்துக்கும், காமகோட்டத்துக்கும், குமரகோட்டத்துக்கும் இடையில் 51 சக்தி பீடங்களில் ஒட்டியாண பீடமாகவும், ஐங்கார அக்ஷரசக்தி பீடமாக விளங்கும் காளிக்கோட்டத்தில் அருள்மிகு ஆதிகாமாஷி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள். கயிலையில் ஒருசமயம் சிவனின் திருக்கண்களை கணப்பொழுது தன் கையால்...