உக்கிரத்தை தனித்ததாலும் ஆதிபீடாபரமேசுவரி எனவும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திருத்தலம் 3500 ஆண்டுகள் பழமையானது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. நகரேஷீ காஞ்சியில் திருவேகம்பத்துக்கும், காமகோட்டத்துக்கும், குமரகோட்டத்துக்கும் இடையில் காளிக்கோட்டத்தில் ஸ்ரீ ஆதிகாமாஷி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள். கயிலையில் ஒருசமயம் சிவனின் திருக்கண்களை கணப்பொழுது தன் கையால் அன்னை மூடினால் அப்போது உலகம் இருண்டு பாவம் பெருகி அது கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது. கைகளை விலக்கிக் கொண்ட போது உலகம் ஒளிப்பெற்றது. ஆனால் அன்னையின் உருவில் மாற்றம் இல்லை. கருமையான அன்னையை காளி என்று அழைத்தார்கள். பாவ விமோசனம் வேண்டிஅன்னை காசியில் அன்னப்பூரணியாக இருந்து தர்மங்கள் செய்து தென்நாட்டின் காஞ்சியம்பதி வந்து கங்கணேசம், கடகேசம்...