Screen Reader Access     A-AA+
அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேஸ்வரர் திருக்கோயில், காந்திசாலை, காஞ்சிபுரம் நகர் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Vazhakarutheeswarar and Parasareswarar Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001826]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயிலின் மூலவரான அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் சுவாமியை தம்மிடம் வந்து குறையிரந்து வேண்டும் அன்பர்களின் வழக்குகளைத் தீர்ப்பதுடன் வழக்கிற்கு மூல காரணமான பொருளைக் கண்டறிந்து அதனை அவர்கள் மனதிலிருந்தும் நீக்கி அருள்பாலிகிறார். நடுநிலையாளர் ஒருவரால் தீர்ப்பு மட்டும் வழங்க முடியும். ஆனால் யாவருக்கும் மேலாம் இறைவன் வழக்கின் மூலக்காரணத்தையே அறுத்து எறிவதால்( வழக்கறுத்தீசன்) எனப்படுகிறார் என்பர் நிறை மொழிமாந்தர். இவ்வாலயத்தில் 16 வாரங்கள் விளக்கேற்றி வைத்து, இறைவனை 16 முறை வலம் வந்து வழிப்பட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கிறது என்பது பக்தர்களின் உறுதியான எண்ணமாகும்.

புராண பின்புலம்

திருமுறைப்பாடல் பெற்ற சைவத் திருக்கோயில்களுக்கும்,மங்களாசாசனம் பெற்ற வைணவத் திருக்கோயில்களும் நிறைந்துள்ள காஞ்சி மாநகரில், பக்தர்களால் பெரிதும் விரும்பப்படும் அபிமானத் தலமாகவும், பழமையானதாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது.வேதத்தில் வரும் சத்து மற்றும் அசத்து என்னும் சொற்களின் உண்மையான பொருள் குறித்தும், சத்திலிருந்து அசத்து தோன்றியதா அல்லது அசத்திலிருந்து சத்து தோன்றியதா என்பது குறித்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதுவே சர்ச்சையாகமாறி அவர்களிடையே சண்டை உண்டாயிற்று.( சத்து என்ற சொல் உண்மைப்பொருள் என்றும் உள்ளது எனவும், அசத்து என்ற சொல் நிலையற்றது, மாயை, பொய்யானது எனவும் பொருள்படும்) இறைவனே பெயர், வடிவம் முதலியானவைகளை ஏற்ற நிலையில் அசத்தாகவும்...