அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களில் 62 ஆவது திவ்வியதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் ஆகும். புராணங்களின்படி சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். குனி முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல முயன்ற போது அவர்களை சந்தித்த நாரதர் குனி முனிவரின் மகளுக்குத் திருமணம் ஆகாததால் அவளால் சொர்க்கத்தில் நுழைய முடியாது எனக் கூறினார். மேலும் தேவலோகத்திலுள்ள முனிவர்கள் யாரேனும் குனி முனிவரின் மகளைத் திருமணம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் சொர்க்கலோகத்தில் வாழ உதவுமாறு அனைத்து முனிவர்களிடமும் வேண்டினார். காலவ ரிஷி என்பவர் குனி முனிவரின் மகளைத் திருமணம் செய்து 360 பெண்குழந்தைகளைப் பெற்றார். இத்திருத்தலத்தில் தனது 360 கன்னிகைகளுடன்...அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களில் 62 ஆவது திவ்வியதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் ஆகும். புராணங்களின்படி சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். குனி முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல முயன்ற போது அவர்களை சந்தித்த நாரதர் குனி முனிவரின் மகளுக்குத் திருமணம் ஆகாததால் அவளால் சொர்க்கத்தில் நுழைய முடியாது எனக் கூறினார். மேலும் தேவலோகத்திலுள்ள முனிவர்கள் யாரேனும் குனி முனிவரின் மகளைத் திருமணம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் சொர்க்கலோகத்தில் வாழ உதவுமாறு அனைத்து முனிவர்களிடமும் வேண்டினார். காலவ ரிஷி என்பவர் குனி முனிவரின் மகளைத் திருமணம் செய்து 360 பெண்குழந்தைகளைப் பெற்றார். இத்திருத்தலத்தில் தனது 360 கன்னிகைகளுடன் வந்து வாழ்ந்து வந்தார். 360 பெண்களுக்கும் திருமணம் ஆக வேண்டி பெருமாளைப் பிரார்த்தனை செய்து வந்தார். காலவ ரிஷியின் வேண்டுதலை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டார். கடைசி நாள் அன்று திருமால் தனது வராகமூர்த்தி அவதாரத்தில் காலவ ரிஷிக்கு காட்சி தந்தார். எப்போதும் திருமணக் கோலத்திலேயே இருந்ததால் இவருக்கு நித்யகல்யாண பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. 360 பெண்களையும் சேர்த்து ஒரே பெண்ணாக மாற்றி தனது இடது புறத்தில் நிறுத்தி அனைவருக்கும் காட்சி தந்தார். திருவாகிய மகாலட்சுமி தேவியை தன் இடது பக்கத்தில் வைத்து சேவை சாதித்ததால் இந்த தம் திரு-இட-எந்தை என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் இவ்வூர் திருவிடந்தை என்ற பெயர் ஏற்பட்டது .