Screen Reader Access     A-AA+
அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், செட்டிபுண்ணியம் - 603204, செங்கல்பட்டு .
Arulmigu Devanatha Perumal Temple, Chettipuniyam - 603204, Chengalpattu District [TM001844]
×
Temple History

தல வரலாறு

செட்டிபுண்ணியம் அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மகேந்திரா சிட்டி நிறுத்தத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும் மூலவர் வரதராஜ பெருமாள் 500 ஆண்டுகளாக இத்திருக்கோயிலில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். உற்சவமூர்த்தி தேவநாத பெருமாள் யோக ஹயக்ரீவர் பெருமாளும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவைந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்திலிருந்து இந்த ஊரைச் சார்ந்த திவான் ரங்காச்சாரியார் என்பவரால் கீழக வருஷம் வைகாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் இத் திருக்கோவிலுக்கு எழுந்தருளச் செய்தார். அது முதல் அருள்மிகு வரதராஜ பெருமாள் , தேவநாதபெருமாள் ,யோக ஹயக்ரீவர் ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒரே கருவறைக்குள்...

இலக்கிய பின்புலம்

இத்திருக்கோவில் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் இங்கு மூலவர் அருள்மிகு வரதராஜ பெருமாள் சேவை சாதித்து வருகிறார் உற்சவமூர்த்தி அருள்மிகு ஸ்ரீ தேவநாத பெருமாளும் ஸ்ரீ யோக ஹயக்ரீவரும் திருவந்திபுரம் எனும் திவ்ய தேசத்திலிருந்து 1848 கீழக வருடம் வைகாசி மாதம்சில திருக்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.என்ற பெருமையுடயது.

புராண பின்புலம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வட ஆற்காடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இந்த ஊரைச் சேர்ந்த திவான் ரங்காச்சாரியார் என்பவர் தம் சொந்த முயற்சியினால் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருவையிந்திரபுரம் என்ற திவ்யதேசத்திலிருந்து உற்சவமூர்த்தி ஸ்ரீ தேவநாதப் பெருமாள் மற்றும் ஸ்ரீ யோக ஹயக்ரீவரை இத் திருக்கோயிலுக்கு 1848 கீலக வருடம் வைகாசி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து இத்திருக்கோயிலில் எழுந்தருளச்செய்தார்.