பிரம்மதேவனின் மனஸ புத்திரர்களுள் ஒருவன் தட்சன். பிறைசூடிய பெருமானின் மீது தீவிர பக்தி கொண்ட தட்சன், நான்முகனின் கட்டை விரலில் அவதரித்தவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன, தட்சனின் பெண் தாட்சாயணி.அழகிலும், நற்குணங்களிலும் ஈடிணையற்றவள். சிவபெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டவள்.விவாக வயதை அடைந்த தன் பெண்ணின் அழகையும் அரண்மனையில் வசதிகளுடன் வாழ்ந்ததையும் கருதி, தாட்சாயணியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுக்க தட்சனுக்கு விருப்பமில்லை.
விரித்த சடையுடன் நாகங்களை மாலையாக அணிந்துகொண்டு, மயானத்தில் திரியும் மகாதேவனுக்கா நான் பெண்ணை கொடுப்பேன்? என்று பலரிடமும் திருக்கயிலை பெருமானைப் பற்றி ஏளனமாகக் கூறிவந்தான் தட்சன். தன் பெண்ணிற்கு ஏற்ற மாப்பிளையைத் தேர்ந்தெடுப்பதற்காக சுயம்வரம் ஒன்றையும் ஏற்பாடு செய்தான்.சுயம்வரத்திற்கு இந்திராதி தேவர்கள்,கந்தவர்கள் வித்யாதர்கள் என அனைத்து தேவர்களும் தாட்சாயணியின்...பிரம்மதேவனின் மனஸ புத்திரர்களுள் ஒருவன் தட்சன். பிறைசூடிய பெருமானின் மீது தீவிர பக்தி கொண்ட தட்சன், நான்முகனின் கட்டை விரலில் அவதரித்தவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன, தட்சனின் பெண் தாட்சாயணி.அழகிலும், நற்குணங்களிலும் ஈடிணையற்றவள். சிவபெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டவள்.விவாக வயதை அடைந்த தன் பெண்ணின் அழகையும் அரண்மனையில் வசதிகளுடன் வாழ்ந்ததையும் கருதி, தாட்சாயணியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுக்க தட்சனுக்கு விருப்பமில்லை.
விரித்த சடையுடன் நாகங்களை மாலையாக அணிந்துகொண்டு, மயானத்தில் திரியும் மகாதேவனுக்கா நான் பெண்ணை கொடுப்பேன்? என்று பலரிடமும் திருக்கயிலை பெருமானைப் பற்றி ஏளனமாகக் கூறிவந்தான் தட்சன். தன் பெண்ணிற்கு ஏற்ற மாப்பிளையைத் தேர்ந்தெடுப்பதற்காக சுயம்வரம் ஒன்றையும் ஏற்பாடு செய்தான்.சுயம்வரத்திற்கு இந்திராதி தேவர்கள்,கந்தவர்கள் வித்யாதர்கள் என அனைத்து தேவர்களும் தாட்சாயணியின் கைத்தலம் பற்றுவதற்காக சுயம்வர மண்டபத்திற்கு வந்தனர்.
ஆனால், தாட்சாயணியோ, அம்மயைப்பனைத் தவிர வேறு எவரையும் தனது சிந்தையில் நினைக்கவில்லை. சுயம்வர மாலையிடன் மண்டபத்தை அடைந்த தாட்சாயணி மனதால் மகாதேவனை நமஸ்கரித்து,மாலையை ஆகாயத்தை நோக்கி வீசி எறிந்தாள்.ஆகாய வெளியில் நந்திதேவர், சிவகணங்கள் சூழ ரிஷபாரூடராக எழுந்தருளிய சிவபெருமானின் திருக்கழுத்தில் அந்த சுயம்வர மாலை மணமாலையாக மிகச் சரியாக விழுந்து பிரபுவின் நீலகண்டத்தை அழகாக அலங்கரித்தது.ஈரேழு பதினான்கு உலகிற்கு தாயும் தந்தையுமாய்க் காத்தருளும் பெருமானின் கைத்தலம் பற்றி மகிழ்ந்தாள் சதிதேவி(தாட்சாயணி).
தட்சனின் சீற்றம்: ஈசன் மீது கடும் கோபம் கொண்ட தட்சன், ஈசனை மதியாது தன் அன்புமகள் தாட்சாயணியையும் அழைக்காமல் தேவர்களை முன்னிறுத்தி ஒரு பெரும் யாகத்தைத் தொடங்கினான்.தட்சனின் தகாத செயல்பாடுகள் தேவர்களுக்குத் தெரிந்திருந்தும் தட்சனை மீறி அவர்களால் எதுவும் செய்ய துணிவில்லை. தன்னை அழைக்காததால், சிவபெருமானுக்கு அந்த மிகப்பெரிய யாகத்திற்குச் செல்லவில்லை. ஆயினும்,தாட்சாயணிக்குத் தன் தந்தை செய்யும் யாகத்தைக் காணவேண்டும் என்ற அவா மேலிட்டது. மேலும், தாட்சாயணிக்கு தனது 27 நட்சத்திர சகோதரிகளை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதால், சிவபெருமான் தடுத்துக் கூறியும் யாகத்திற்குச் சென்றாள்.
யாக மண்டபத்தில் அமர்ந்திருந்த தேவர்களின் முன் தட்சன் சிவபெருமானை இகழ்ந்தான். தாட்சாயணியை அவமதித்தான்.அதனால் கோபமும், வேதனையும், வருத்தமும் மேலிட தாட்சாயணி அங்கு கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த யாக குண்டத்தில் பாய்ந்து, தன்னையே தியாகம் செய்துகொண்டாள். அவளது கோபத்திலிருந்து வெளிப்பட்டாள் பத்ரகாளி.
நாரத மகரிஷி மூலம் நடத்தவற்றை அறிந்த சிவபெருமான் சினத்தால் தீப்பிழப்பாக மாறினார்.ஈரெழு பதினான்கு உலகங்களும் ஐயனின் கோபம் என்ற தீயில் தகித்தன.நவகிரகங்களும் நிலைகுலைந்தன.வானில் வலம் வந்த சூரியனின் ரதம் அப்படியே நின்றுவிட்டது.
தனது சடையிலிருந்து சிறு கற்றையைப் பிடுங்கி எறிந்து தரையில் வீசி, அதில் இருந்து வெளிப்பட்டார் சிவபெருமானின் அம்சமான அகோர வீரபத்திரர்.
சிவபெருமானின் ஆணையை ஏற்று, அகோர வீரபத்திர் அழிக்கப் புறப்பட்டார்.தகாத செயல்புரிந்த தட்சனின் தலையைத் தன் வில்லிருந்து புறப்பட்ட அம்பினால் ஒரே நொடியில் சாய்த்து முடிந்தார்.வீரபத்திரர்.தன் மைந்தன் தட்சனின் இழப்பால் வருந்திய பிரம்மதேவன் , சிவபெருமானிடம் தனது மகனின் செயலைப் பொறுத்தருளி, மீண்டும் உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டினார்.ஐயனின் ஆணைப்படி, வீரபத்ரும் தலையிழந்து கிடந்த தட்சனின் உடலில் ஆட்டினுடைய தலையைப் பொருத்தி மீண்டும் உயிர் பெற்று ஏழச் செய்தார்.
தட்சனை வதம் செய்தும், தன் சினம் தணியாத வீரபத்திரர் ஆலவாய் அண்ணலிடம் கோபம் தணிய உபாயம் கேட்டு வேண்ட, காடுகளும்,மலைகளும் சூழ்ந்த குளிர்ந்த நிலப்பரப்பில் அமைந்த அரன்மைந்தபுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்றால் கோபம் தணியும் என்று கூறியருளினார்.
வீரபத்திரர் தன் சினம் தணிய திருக்கோயில் கொண்டு எழுந்தளியுள்ள இடமே அரன்அமைந்தபுரம் என்று பூஜிக்கப்பட்டு, பின்னர் அனுமந்தபுரம் என்று வழங்கப்பட்டு வரும் திருத்தலமாகும்.