Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிகம்பட்ட விசுவநாதசுவாமி திருக்கோயில், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Aathekambataviswanathar Temple, Kumbakonam - 612001, Thanjavur District [TM018509]
×
Temple History

தல பெருமை

பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்த மாலை இத்தலத்தில் விழுந்ததால் இத்தலம் மாலதிவனம் என்று அழைக்கப்பட்டது. அப்போது உதயகிரியில் நிசாசரா என்ற மாதவர் இருந்தார். அவரது புதல்வரான தூமகேது தமது மாணவர்கள் சூழ்ந்துவர இத்தலத்தை அடைந்தார். தூமகேது முனிவர் சிவபெருமான் தந் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி பேரின்ப வெள்ளத்தில் நீந்தித் திளைத்தார். அந்த ஆனந்தமயமான காட்சியைக் கண்ட தூமகேது இறைவன் விசுவேசர் என்றும், இறைவி ஆனந்தநிதி என்ற பெயருடனும் விளங்கமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே இறைவனும், இறைவியும் அழைக்கப்படுகின்றனர்.