Screen Reader Access     A-AA+
அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், நந்திவரம் - 603202, செங்கல்பட்டு .
Arulmigu Nanthiswarar Temple, Nanthiswaram - Gouvanchery - 603202, Chengalpattu District [TM001854]
×
Temple History

தல பெருமை

இறைவர் திருப்பெயர் நந்தீஸ்வரர். இறைவியார் திருப்பெயர் சௌந்தர்யநாயகி. வழிபட்டோர் நந்தி. வைப்புத்தலப் பாடல்கள் அப்பர் - நாடகமா டிடநந்தி 6-71-8. நூறு வருடங்களையும் கடந்த நாகலிங்க மரம் ஒன்று இங்கு பிரமாண்டமாகக் காணப்படுகிறது. தல வரலாறு தமிழகம் முழுவதும், கூடுவாஞ்சேரி என நன்கு அறியப்படும் நந்திவரம் என்ற நகரம், பல்லவர் கால வரலாற்றுத் தொடர்புடையது. புகழ்பெற்ற சிவதலமாக விளங்கும் நந்தீஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் இடமாதலால், நந்திகேச்சுரம் மருவி நந்திவரம் என்றானதாக கூறப்படுகிறது. நந்திவரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் கோவில், நந்தி வழிபட்ட தலம் எனவும், பல்லவர் கால வழிபாட்டுத் தலம் எனவும் நம்பப்படுகிறது. பல்லவர் கால வாணிபக் கூடமாகவும், நந்திவரம் விளங்கியுள்ளதற்கான சான்றுகளாக, கல்வெட்டுகள் பல உள்ளன. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர் உயிரியல்...