தமிழ் நாடு தாம்பரம் சென்னை - செங்கற்பட்டுச் சாலையில் கூடுவாஞ்சேரி வந்து, அங்கிருந்து அருகாமையில் உள்ள நந்திவரம் செல்லும் சாலையில் சென்றால் சாலையோரத்திலேயே உள்ள இக்கோயிலை அடையலாம். ஆலயம் காலை 6 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை ஐந்தரை முதல் எட்டரை மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும் இரண்டு கால பூஜை. காலை எட்டரை மணிக்குக் காலசந்தி மாலை ஐந்தரை மணிக்கு சாயரட்சை.