Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், திருமலைவையாவூர்,கிராமம் - 603314, செங்கல்பட்டு .
Arulmigu Prasanna Venkatesaperumal Temple, Thirumalaivaiyavur - 603314, Chengalpattu District [TM001879]
×
Temple History

தல வரலாறு

ஆதிவராக சுவாமி ஆதிவராக ஷேத்திரம் ஆதிவராக புஷ்கரணி என்றவாறு மூர்த்தி.தலம்,தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி திருமலையைப்போல் சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும்.ஆதிஷேசனுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்த பெருமையுடையது இத்திருத்தலம்.திருப்பதி திருமலை திருக்கோயிலை கட்டுவித்த அபராஜித வர்ம பல்லவ மன்னன் வேண்டியவாறு இத்திருமலையின் மீது வெங்கடேசப்பெருமாள் இரதத்தின் மீது காட்சி அளித்ததால் ஸ்வாமி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இரதத்தின் மீது காட்சி அளித்ததற்கு அடையாளமாக இரதசக்கரம் அடையாளமும்,குதிரைக்கால் குளம்பின் அடையாளமும் ஒரு பாறையின் மீது காலங்கள் பலவற்றை கடந்து இன்றளவும் காட்சி அளிக்கிறது.அக்காலத்தில் விஜயநகர அரசை சேர்ந்த ராஜா தோடர்மால் இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமியின் மீது அளவிலா பக்தி பூண்டு இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது.இத்திருமலையின் ஆதிமூர்த்தி ஆதிவராக ஸ்வாமி ஆவார். திருப்பதி...

தல பெருமை

திருமலைவையாவூர் சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் செங்கல்பட்டில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது. திருமலை வையாவூரில் ஒரு சிறிய மலையில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு திருமலை என்றும் அழைக்கப்படும் அழகிய கோயில் உள்ளது. இங்குள்ள அம்மன் ஸ்ரீ அலர் மேல் மங்கை தாயார் ஆவார். இந்த மலைக்கு ஸ்ரீ வைகுண்ட கிரி, தட்சண வேங்கடகிரி, தட்சண சேஷகிரி, வராஹ கேஷேத்திரம், ராமானுஜ யோககிரி என்று பல பெயர்கள் உண்டு. இந்த பழமையான கோவிலில் சில சுவாரஸ்யமான புராணக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த போரின் போது, லக்ஷமணன் போர்க்களத்தில் மயங்கி விழுந்தான். லட்சுமணனைக் குணப்படுத்த சஞ்சீவி மலையைக் கொண்டு வர ஸ்ரீ இராமர் அனுமனை அனுப்பினார். ஸ்ரீ ராமர்...

இலக்கிய பின்புலம்

இத்திருக்கோயில் ஆந்திர விஜய நகரை சேர்ந்த மன்னன் ராஜா தோடர் மால் அவர்களால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப் பெற்றது என்ற விவரம் தெரிந்து கொள்ளப்படுகின்றது.

புராண பின்புலம்

-