தல வரலாறு
இத்திருக்கோயிலின் கருவறைக்குள் வள்ளி தெய்வானையிடன் கூடிய சுப்பிரமணியரின் சுந்தரக்கோலத்தைக் காணலாம்.. சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி அருள்புரியும் குன்றத்தூர் மலையில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் தொன்மை சிறப்புமிக்க வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளது பெருமைக்குரியதாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்புரியும் முருகப்பெருமானை அருணகிரிநாதபெருமான் வளமிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே என்று குன்றத்தூர் முருகன் மீது மூன்று (திருப்புகழ்) பாடல்களை பாடிய சிறப்பித்துள்ளார்.