அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர் - 600069, காஞ்சிபுரம் .
Arulmigu Sekizhar Temple, Kunrathur - 600069, Kancheepuram District [TM001886]
×
Temple History
தல பெருமை
ஒப்பேதும் இல்லா குன்றை முனிவர் எனப் போற்றப்படும் சேக்கிழார் பெருமான் பிறந்த ஊர் குன்றத்தூர் ஆகும்.
சான்றோர் பலர் வாழுஞ் சால்புடையது. தொண்டை நன்னாடு அந்நாட்டில் 24 கோட்டங்கள் உண்டு. அவற்றுள் புலியூர் கோட்டத்தைச் சேர்ந்த குன்றை வள நாட்டில் விளங்குவது குன்றத்தூர் என்னும் நற்றவப்பதி அவ்வூரில் சேக்கிழார் என்னும் திருமரபு சிறந்திருந்தது.
சோழ மன்னன் முற்காலத்தில் தொண்டை மண்டலத்தில் குடியேற்றும் பொருட்டு தேர்ந்தெடுத்த நாற்பத்தெண்ணாயிரம் நற்குடிகளும் ஒன்று சேக்கிழார் மரபு. இத்திருமரபிலே நாடு உய்ய அருள்மொழித் தேவர் அவரித்தார். சேக்கிழார் என்பது குடிப்பெயர் தாய் தந்தையர் இட்ட பெயர் அருள்மொழித் தேவர். அருள்மொழித்தேவர்...ஒப்பேதும் இல்லா குன்றை முனிவர் எனப் போற்றப்படும் சேக்கிழார் பெருமான் பிறந்த ஊர் குன்றத்தூர் ஆகும்.
சான்றோர் பலர் வாழுஞ் சால்புடையது. தொண்டை நன்னாடு அந்நாட்டில் 24 கோட்டங்கள் உண்டு. அவற்றுள் புலியூர் கோட்டத்தைச் சேர்ந்த குன்றை வள நாட்டில் விளங்குவது குன்றத்தூர் என்னும் நற்றவப்பதி அவ்வூரில் சேக்கிழார் என்னும் திருமரபு சிறந்திருந்தது.
சோழ மன்னன் முற்காலத்தில் தொண்டை மண்டலத்தில் குடியேற்றும் பொருட்டு தேர்ந்தெடுத்த நாற்பத்தெண்ணாயிரம் நற்குடிகளும் ஒன்று சேக்கிழார் மரபு. இத்திருமரபிலே நாடு உய்ய அருள்மொழித் தேவர் அவரித்தார். சேக்கிழார் என்பது குடிப்பெயர் தாய் தந்தையர் இட்ட பெயர் அருள்மொழித் தேவர். அருள்மொழித்தேவர் வெள்ளியங்கிரி முதலியார் அழகம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
சேக்கிழார் சுவாமிகள் அவதரிக்க தவஞ்செய்தது வேளாளர் குலம்.
சோழவள நாட்டை இனிது அரசு புரிச்து வந்தவர் அநபாய சோழர் அம்மன்னரிடம் அருள்மொழித் தேவருடைய தந்மையார் அமைச்சராக இருந்தார் ஒரு நாள் அமைச்சரை நோக்கி 3 (மூன்று) வினாக்களை வினாவினார். தன் மூன்று கேள்விகளுக்கும் விடை தந்த தெய்வச் சேக்கிழாரின் அறிவுத் திறத்தை அநபாய சோழன் பாராட்டி முதலமைச்சர் பதவி அளித்தார்.
சேக்கிழார் பெருமான் மன்னனிடம் விடைபெற்று தில்லை சென்று அம்பலவாணரைக் கண்குளிர கண்டு வணங்கித் தொழுது அடியேன் உமது திருத்தொண்டர் களது மெய்வரலாறுகளைப் பாடி முடிக்க அடியெடுத்துத் தர வேண்டும் என்று வேண்டி நின்றார். வானில் அருள்நாத ஒலியாக உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக் கொடுத்ததையே முதலாக வைத்து இறைவன் திருவருளைச் சிந்தித்து தவவொழுக்கத்துடன் இருந்து 4286 செந்தமிழ்ப் பாடல்களாகப் பாடி அதற்கு திருத்தொண்டர் புராணம் என்று பெயரிட்டு அம்பல வாணர் திருவடியில் வைத்து வழிபட்டார் சேக்கிழழர் பெருமான்.
தெய்வச் சேக்கிழார் சிறப்பு
முதலமைச்சராகவும், சிவத் தொண்டராகவும் இருந்தவர்கள் இருவர். ஒருவர் மாணிக்கவாசகர் மற்றொருவர் தெய்வச் சேக்கிழார்
தெய்வப் புலவர்கள் இருவர் ஒருவர் சேக்கிழார் மற்றொருவர் திருவள்ளுவர்.
தெய்வ என்ற அடைமொழியை நேரே பெயரோடு சேர்த்து அழைக்கும் பெருமை பெற்றவர் தெய்வச் சேக்கிழார்.
உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கும் படியான பேறு பெற்றவர் தெய்வச் சேக்கிழார்.
இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கும்படியான பெறு பெற்றவர்கள் மூவர். ஒருவர் சேக்கிழார் மற்றொருவர் சுந்தரர் மற்றுமொருவர் அருணகிரிநாதர்.
சேக்கிழாரை யானை மீது அமரச் செய்து தான் உடனிருந்து சேக்கிழாருக்கு கவரி வீசி சிறப்பு செய்தான் சோழன் அநபாயன். வேறு எந்த புலவருக்கும் கிடைக்காத இந்த சிறப்பு பெற்றவர் தெய்வச் சேக்கிழார்
அநபாய சோழன் சேக்கிழாருக்கு முதலமைச்சர் பதவியும், பின் உத்தம சோழன்ப் பல்லவராயன், தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டங்களையும் தந்து சிறப்பித்தான்.
சோழ நாட்டில் உள்ள திருநாகேஸ்வரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானிடம் கொண்ட அன்பால், தான் பிறந்த குன்றத்தூரில் திருநாகேஸ்வரத்தில் உள்ளது போல திருக்கோயிலைக் கட்டி அதற்கு வட திருநாகேஸ்வரம் என்று பெயரிட்டு மகிழ்ந்தவர் சேக்கிழார்.
சீவக சிந்தாமணி என்ற சிற்றின்ப காவியத்தில் ஈடுபட்ட மன்னனுக்கு அடியார் வரலாற்றை எடுத்துரைத்து சைவம் தழைக்கச் செய்தவர் சேக்கிழார்.
தற்பொழுது தெய்வச் சேக்கிழார் வாழ்ந்த இல்லமே திருக்கோயிலாக உள்ளது.