அருள்மிகு ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், சென்னை - 600061, சென்னை .
Arulmigu Adivyadhihara Bagtha Anjaneyar Temple, Nanganallur, Athambakkam, Chennai - 600061, Chennai District [TM000019]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் ஸ்ரீமாருதி பக்த சமாஜம் டிரஸ்டால் தோற்றுவிக்கப்பட்டது. 04.02.1985 ல் பத்திரப்பதிவு எண் 53/1985ன் படி டிரஸ்ட் துவக்கப்பட்டு அறநிறுவனம் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 13.12.1985 ல் இந்த டிரஸ்ட் திருக்கோயில் கட்டுவதற்காக பிளாட் எண் 1 ராம்நகர், நங்கநல்லூர், புல எண். 93, புதிய சர்வே எண்.47 பிளாக் எண்.14, பரப்புளவு 16458 சதுர அடி இடத்தினை 14.12.1985 ல் மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் பெயரில் திருக்கோயில் நிதியிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. 1992 ல் 32 அடி உயரமுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.1995ல் மண்டபம், இதர சன்னிதிகள் தோற்றுவிக்கப்பட்டு பூஜைகள்...இத்திருக்கோயில் ஸ்ரீமாருதி பக்த சமாஜம் டிரஸ்டால் தோற்றுவிக்கப்பட்டது. 04.02.1985 ல் பத்திரப்பதிவு எண் 53/1985ன் படி டிரஸ்ட் துவக்கப்பட்டு அறநிறுவனம் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 13.12.1985 ல் இந்த டிரஸ்ட் திருக்கோயில் கட்டுவதற்காக பிளாட் எண் 1 ராம்நகர், நங்கநல்லூர், புல எண். 93, புதிய சர்வே எண்.47 பிளாக் எண்.14, பரப்புளவு 16458 சதுர அடி இடத்தினை 14.12.1985 ல் மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் பெயரில் திருக்கோயில் நிதியிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. 1992 ல் 32 அடி உயரமுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.1995ல் மண்டபம், இதர சன்னிதிகள் தோற்றுவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இத்திருக்கோயில் தற்காலத்தில் (1985) ல் ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. நங்கநல்லூர், அதிக மக்கள் வாழும் பகுதியாக இருந்த காரணத்தினால் பொதுமக்கள் வழிபாட்டிற்கு கோயில் கட்ட ஆர்வமாக இருந்தனர். அந்த நேரத்தில் ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் அறக்கட்டளையின் நோக்கமும் ஆலயம் கட்டுவதாக இருந்ததால் பொதுமக்கள், அறக்கட்டளையும் சேர்ந்து ஆலயம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. 1992 ல் 32 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலையைப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்பு கருவறை, விமானம், மகாமண்டபம், 5 நிலை இராஜகோபுரம், பிரகாரங்கள் அமைக்கப்பட்டு 1995 ல் முதல் மகா நன்நீராட்டு விழா நடைபெற்றது.
ஸ்ரீ மூலவர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயராக கீழ்கண்ட அம்சங்களோடு அருள்பாலிக்கிறார்.
1.ஆதி - பூர்வ ஜென்மம் , மனிதர்களின் சரீரம் (உடம்பு)
2.வ்யாதி - பூர்ண ஜென்மத்தில் ஏற்பட்ட கர்மாவினால் இந்த ஜென்மத்தில் சரீரத்திற்கு வரக்கூடிய நோய்கள்
3. ஹர - பூர்வ ஜென்மத்தில் ஏற்ப்பட்ட கர்மாவையும், இந்த ஜென்மத்தில் சரீரத்தில் ஏற்படும் நோய்களையும் தீர்ப்பவர்.
4. அஞ்சலி அஸ்தம் - பிரார்த்தனை வேண்டி வரக்கூடிய பக்தர்களுக்கு குறைகளைத் தீர்த்து வைக்கும் அம்சத்தில் இருப்பவர்.
5.கண்கள் - கருணை பொங்கும் கண்கள் (பிரார்த்தனை செய்ய வருபவர்களுக்கு வள்ளல் தன்மை வழங்குபவர்)
6.கைகள் - பக்தர்கள் தன்னுடைய பந்தங்களுக்கு அன்பாக நடந்து கொள்ளவும், உறவை மேம்படுத்துவம் ரக்ஷை அளித்து அருள்பாலிப்பவர்.
7.கால்கள் - தன்னுடைய வலது கால்களில் வீர்யமணி அணிந்து உள்ளார். வீர்யமணி என்பது முழுமையான பிரம்மச்சாரி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் அணிந்துகொள்ளும் ஒரு அணிகலனாகும்.
இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயர் பெருமான் அனைத்து நோய்களை குணமாக்கியும் எதிரிகள் குறித்த பயம் நீங்கவும் பிரார்த்தனை அருள்பாளிக்கிறார். மேற்படி திருக்கோயில் அமைவிடமான 16458 சதுர அடி இடத்தை ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் அறக்கட்டளையின் பெயரில் வாங்கப்பட்டதை மட்டும் 24.12.2020 அன்று திருக்கோயிலின் பெயருக்குத் தானம் பத்திரம் மூலம் பதிவு செய்துள்ளார். ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் பெயரில் நங்கநல்லூர், கூ.ளு.சூடி.302/1 புதிய சர்வே எண்.87/1 ல் 2556 சதுர அடி, ஸ்ரீபவமான் அன்னதான டிரஸ்ட் பெயரில் புல எண்.87/1 ல் 2320 சதுர அடி இடம் 14.02.1996 ல், சர்வே எண். 97 2- வது பிரதான சாலை, பிளாட் எண்.2,3 ல் மொத்தம் சதுர அடி 2970 28.12.2002ல் வாங்கப்பட்டுள்ளது. 14.09.2019 ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் பெயரில் பிளாட் எண்.19 மற்றும் 20 ல் 5276 சதுர அடி இடம் வாங்கப்பெற்றது. இந்த இடத்தில் திருக்கோயிலுக்கு பிரசாதங்கள் தயாரிக்கும் மடப்பள்ளி, வடைமாலை தயாரிக்கும் மடப்பள்ளி, சரக்கறை, திருக்கோயில் நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் பாதுகாக்கும் கருவூல அறை, அலுவலகம், பக்தர்களுக்கு கழிவறை, கோசாலை மற்றும் கோசாலை பராமரிப்பவர் குடியிருப்பு இவையாவும் அமைந்துள்ளன. மேற்படி சொத்துக்கள் அனைத்தும் திருக்கோயில் 1995ல் நிறுவப்பட்டு பின்பு அறக்கட்டளையின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களாகும். மேற்படி சொத்துக்களை ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் பெயரில் வைத்து உள்ளனர்.
மேற்படி சொத்துக்கள் அனைத்தும் திருக்கோயிலின் கட்டுபாடுகளில் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பதால் மேற்படி திருக்கோயிலின் பெயரில் உரிமம் இருப்பது தான் திருக்கோயிலின் நலனுக்கு உகந்ததாகயிருக்கும் என்ற விவரம் குறிப்பிடப்படுகிறது.
20.03.1995 ல் ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் மூல பத்திரம் தொலைந்து போன நிலையில் மீண்டும் பதிவு செய்யப்பட்டு அந்த பழைய டிரஸ்ட் பத்திரம் ஒன்றுசேர்க்கப்பட்டது. 28.08.1995 ல் மேற்படி பக்த சமாஜம் டிரஸ்ட் இத்திருக்கோயில் அறநிலையத்துறை சட்டம் 1959 ல் விலக்கு அளிக்க விண்ணப்பிக்கப்பட்டது. 01.11.1995 ல் அரசாணை 346 அறநிலையங்கள் மற்றும் வணிக வரித்துறை நாள் 01.11.1995 அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 25,35,36,45,47,53,55,56,57,58,86, மற்றும் 103 ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டது.29.11.1995 ல் மீண்டும் அறநிலையத்துறை சட்டப்பிரிவு 4 ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டது.
10.03.1996ல் அரசாணை எண் 113 வணிகவரி மற்றும் அறநிலையத்துறை நாள் 10.06.1996ன் படி23,24,25,27,29,30,31,32,33,34,36,38,43,70,71,87,90,92,93,94,96,97,98,99, மற்றும் 100 பிரிவுகளில் விலக்கு அளிக்கப்பட்டது.
மேற்படி திருக்கோயிலில் இருபத்திரண்டு வகையான சேவை கட்டணங்கள் திருக்கோயில் வசூலித்து ரசீது கொடுக்கப்பட்டதாலும், திருக்கோயில் பெயரில் வங்கி கணக்கு இயக்கப்படாமல், ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட் போன்ற பெயர்களில்
வங்கி கணக்கு இயக்கப்பட்டது போன்ற புகாரின் பெயரில் அரசாணை 346 மற்றும் 113 ன்படி கொடுக்கப்பட்ட விலக்கினை திரும்ப கேட்டு அரசிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டது. அதற்கு 25.10.2012 ல் டிரஸ்ட் மூலம் பதில் அளிக்கப்பட்டது.
மேற்படி விசாரணை முடிவில் 19.03.2012 ல் அரசாணை 55 நாள் 19.03.2012 விலக்கு அளிக்கப்பட்ட அரசாணை 346 மற்றும் 113 ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் 15.04.2013 சென்னை உதவி ஆணையரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11.05.2013ல் ஏன் தக்கார் நியமனம் செய்ய கூடாது என்ற அறிவிப்பு அனுப்பப்பட்டது. 03.06.2013 ல் டிரஸ்ட் மூலம் பதில் அனுப்பப்பட்டது. 24.06.2013 ல் அரசாணை 55 ஐ எதிர்த்து டிரஸ்ட் மூலம் றுஞ 17170/2013 தக்கார் நியமனம் செய்யக்கூடாது என்றும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.