எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு இராமபிரான் சீதா தேவி இலக்குமணருடனும் அருள்தரும் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணருடன் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் தொண்டை நாட்டில் பல உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்த சென்னை நங்கநல்லூர் ராம்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூப தரிசனமாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும்.