அருள்மிகு பரிபூரண விநாயகர் மற்றும் சந்தோஷி மாதா திருக்கோயில், விருகம்பாக்கம், சென்னை - 600092, சென்னை .
Arulmigu Paripoorna Vinayagar alias Santhosi Matha Temple, Virugambakam, Chennai - 600092, Chennai District [TM000194]
×
Temple History
தல பெருமை
திருக்கோயில் அமைவிடம்
அன்பர்களுக்கு அருள்பாலித்து லோகத்தை காத்து பக்தர்களுக்கு சந்தோசத்தை கொடுத்து ரட்சிக்கும் அருள்மிகு சந்தோஷிமாதா பரிபூர்ண விநாயகர் திருக்கோயில் சென்னை மாவட்டம் வடபழனி அருகாமையில் விருகம்பாக்கம் நகரில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு
கடந்த 1981- ம் ஆண்டு திரு. சியாமலால் ஜோஷி அவர்களால் கட்டப்பட்டு தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வாலயம் சிறியது என்றாலும் இதன் கீர்த்தி தமிழகத்தில் பெரியது. குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் பல்வேறு பகுதியில் இருந்தும் இங்கு வருகை தந்து அம்மனை தரிசித்து ஆனந்தம் அடையும் பக்தர்கள் பலர். இவ்வாலயத்தில் வெள்ளிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புளிப்பு சுவை உள்ள உணவு எதையும் உண்ணாமல் வீட்டில் அம்மன் படத்தை வைத்து பூஜித்து அம்மனின் கதை படித்து விரதத்தை...திருக்கோயில் அமைவிடம்
அன்பர்களுக்கு அருள்பாலித்து லோகத்தை காத்து பக்தர்களுக்கு சந்தோசத்தை கொடுத்து ரட்சிக்கும் அருள்மிகு சந்தோஷிமாதா பரிபூர்ண விநாயகர் திருக்கோயில் சென்னை மாவட்டம் வடபழனி அருகாமையில் விருகம்பாக்கம் நகரில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு
கடந்த 1981- ம் ஆண்டு திரு. சியாமலால் ஜோஷி அவர்களால் கட்டப்பட்டு தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வாலயம் சிறியது என்றாலும் இதன் கீர்த்தி தமிழகத்தில் பெரியது. குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் பல்வேறு பகுதியில் இருந்தும் இங்கு வருகை தந்து அம்மனை தரிசித்து ஆனந்தம் அடையும் பக்தர்கள் பலர். இவ்வாலயத்தில் வெள்ளிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புளிப்பு சுவை உள்ள உணவு எதையும் உண்ணாமல் வீட்டில் அம்மன் படத்தை வைத்து பூஜித்து அம்மனின் கதை படித்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒன்பது வாரங்கள் அல்லது அதிகபட்சமாக பதினாறு வாரங்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வேர்க்கடலை உப்புக்கடலை பொட்டுக்கடலை வெல்லம் இவற்றை நைவேத்தியமாக பயன்படுத்தி கொள்ளலாம். பச்சை வாழைப்பழம் மிகவும் உகந்தது கடைசி வாரம் வெள்ளிக்கிழமை விரதத்தை முடிக்கும் விதமாக ௮ குழந்தைகளுக்கு புளிப்பு சுவை எதுவுமின்றி உணவு படைத்து விரதத்தை அத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும். இந்த பிரார்த்தனையின் விளைவாக கல்யாணம் மற்றும் சகல சுப நிகழ்ச்சிகளும் நாம் எண்ணியபடியே சந்தோஷிமாதா அருளால் நிறைவேறும். மேலும் வளையல் வாங்கி கொடுத்து அம்மனை பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். இத்திருக்கோயிலில் ஸ்தல விருட்சம் இல்லை ஆலயத்தில் விநாயகர் சன்னதி நவகிரக சன்னதியும் உண்டு.
பூஜை காலங்கள்
இத்திருக்கோயிலில் தினசரி இரண்டு கால நித்திய பூஜை ஆகம முறைப்படி நடைபெறுகிறது மற்றும் சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை ஸ்ரீ பரிபூர்ண விநாயகருக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருக்கோயிலில் முக்கிய திருவிழாக்கள்
வருடந்தோறும் வரக்கூடிய அம்மனின் ஜென்ம நட்சத்திரமான ஆவணி அவிட்டத்தில் அம்பாளுக்கு ஏகதின லட்சர்ச்சனை வெகு சிறப்பாக நடைபெறும்.
திருக்கோயில் நடைதிறப்பு
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
வெள்ளிக்கிழமையன்று
காலை 6.30 மணி முதல் 1.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை