Screen Reader Access     A-AA+
அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை - 600042, சென்னை .
Arulmigu Dhandeewarar Temple, Velachery, Chennai - 600042, Chennai District [TM000202]
×
Temple History

தல வரலாறு

தண்டீஸ்வரர் கோவில் - வரலாறு மூன்று யுகங்களில் சோமுகாசுரன் என்ற அசுரன் தன் தவ சக்தியால் உலகத்தையும் வானங்களையும் வென்று பிரம்மலோகம் சென்றான். பிரம்மலோகத்தில் பிரம்மாவும் நான்கு வேதங்களும் மட்டுமே வாசம் செய்தன. சோமோகாசுரன் வருவதை அறிந்த பிரம்மதேவர் வேதங்களை புத்தகமாக மாற்றிவிட்டு மறைந்தார். பிரம்மலோகத்தில் யாரும் இல்லாததைக் கண்டு கோபமடைந்த சோமுகாசுரன் நான்கு வேதங்களையும் எடுத்துக்கொண்டு சமுத்திரத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான். இதைப் பார்த்த பிரம்மா கோயிலுக்குச் சென்று நடந்ததைக் குறித்து ஈஸ்வரனிடம் முறையிட்டார். ஈஸ்வரன் வேதங்களை மீட்கும் பணியை மகாவிஷ்ணுவிடம் ஒப்படைத்தார். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து சோமுகாசுரனை வதம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் ஒப்படைத்தார். பிரம்மா புத்தக வடிவில் இருந்த வேதங்களை பழைய நிலைக்கு மாற்றினார். வேதங்கள்...

தல பெருமை

துவாபர யுகத்தில் மிருகண்டுமாமுனிவரின் தவ புதல்வன் பக்த மார்க்கண்டேயனுக்கு வயது ஆயுள் முடியும்போது எமன் பாசக்கயிறை மார்க்கண்டேயன் மீதும் லிங்கத்தின் மீதும் வீசியதால் சிவபெருமான் எமனிடம் தண்டத்தை பறித்தார் நாரதரின் அறிவுரையால் எமன் வேதஸ்சிரேனி தாடாகம் ஏற்படுத்தி பூஜை செய்தார் சிவபெருமான் காட்சியளித்து தண்டத்தை எமனிடம் மீண்டும் அளித்தார் அதனால் சுவாமியின் திருநாமம் தண்டீஸ்வரர் என பெயர் விளங்கியது. நான்கு வேத மூர்த்திகள் ரிக் வேதம் யஜுர் வேதம் சாமவேதம் அதர்வண வேதம் திரேதாயுகத்தில் சோமுகாசுரனால் கவரப்பட்ட வேதங்கள் அசுர தோஷம் நீங்க பிரம்மாவின் அறிவுரையால் தாரகவனத்தில் உள்ள சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டனர் பரமேஸ்வரன் காட்சி அளித்து அசுரதோஷம் நீக்கினார் அதனால் இவ்வூர் வேதசிரேணி என பெயர்பெற்றது...

புராண பின்புலம்

தல வரலாறு திரேதாயுகத்தில் சோமுகாசூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் பூலோகம் மற்றும் தேவலோகத்தையும் வென்று பிரம்மலோகம் சென்றான்.பிரம்மலோகத்தில் பிரம்மா மற்றும் நான்கு வேதங்கள் மட்டுமே வாசம் செய்தனர். சோமுகாசூரன் வருவதை அறிந்த பிரம்மதேவன் வேதங்களை புத்தக வடிவமாக மாற்றிவிட்டு தான் மட்டும் மறைந்திருந்து கவனித்தார். பிரம்மலோகத்தில் யாரும் இல்லாததை கண்ட சோமுகாசூரன் கோபமுற்று நான்கு வேதபுத்தகங்களையும் எடுத்துக்கொண்டு சமுத்திரத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்.இதனைக் கண்ணுற்ற பிரம்மா ,கைலாயம் சென்று ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறி முறையிட்டர். வேதங்களை மீட்டு வரும்...