அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பூவரசன்குப்பம் - 605105, விழுப்புரம் .
Arulmigu Lakshminarasimar Temple, Puvarasankuppam - 605105, Viluppuram District [TM020363]
×
Temple History
தல பெருமை
பூவரசங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது என்பது ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திரம். அச்சரித்திரப்படி பல்லவ அரசர்கள் ஜைன மதத்தைத் தழுவி விஷ்ணு திருக்கோவில்களையும் சிவன் திருக்கோவில்களையும் இடித்துத் தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பகவதபக்தர்கள் திருக்கோவில்களைத் தகர்ப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடு பட்டனர். ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார். அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிராமணர்களைக் கொண்றால் உண்டாகும் தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார். இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான்....பூவரசங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது என்பது ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திரம். அச்சரித்திரப்படி பல்லவ அரசர்கள் ஜைன மதத்தைத் தழுவி விஷ்ணு திருக்கோவில்களையும் சிவன் திருக்கோவில்களையும் இடித்துத் தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பகவதபக்தர்கள் திருக்கோவில்களைத் தகர்ப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடு பட்டனர். ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார். அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிராமணர்களைக் கொண்றால் உண்டாகும் தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார். இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காகவும் முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்ததான். கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்று கூறினார். அரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை. அப்பொழுது அந்த பூவரசமரத்திலிருந்து ஒரு இலைஅரசன் மேல் விழுந்தது. அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது. அவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்த போது நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார். அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான். அந்த முனிவரின் விருப்பத்தின்படி அரசனும் பூவரசங்குப்பத்தில் ஸ்ரீ லட்சுமி நரஸிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான். அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாகவுள்ளார்,