அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர் - 606003, கடலூர் .
Arulmigu Kolanciyappar Temple, Manavalanallur - 606003, Cuddalore District [TM020365]
×
Temple History
இலக்கிய பின்புலம்
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது. திருக்கோயில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்து இருந்துள்ளது. பசுமாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்த்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால்சொறிவதை பொதுமக்களால் காணப்பட்டு இது ஒரு புனித தெய்வம் எனக்கருதி வழிபாடு செய்து வரப்பட்டது. சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்த போது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் தம்பிரான் தோழன் என்று சொல்லக்கூடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையிலிருந்து பதிகம்பாடி விருத்தாசலம் அடையும் போது ஊர், சுவாமி பெயர்களைக் கேள்வியுற்று முதுமைத்தன்மை வாய்ந்த இவர்களால் பொன்பொருள்...அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது. திருக்கோயில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்து இருந்துள்ளது. பசுமாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்த்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால்சொறிவதை பொதுமக்களால் காணப்பட்டு இது ஒரு புனித தெய்வம் எனக்கருதி வழிபாடு செய்து வரப்பட்டது. சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்த போது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் தம்பிரான் தோழன் என்று சொல்லக்கூடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையிலிருந்து பதிகம்பாடி விருத்தாசலம் அடையும் போது ஊர், சுவாமி பெயர்களைக் கேள்வியுற்று முதுமைத்தன்மை வாய்ந்த இவர்களால் பொன்பொருள் கிடைக்காது எனக்கருதி பாடாதொழிந்து சென்றபோது திருமுதுகுன்றத்து ஈசனாகிய பரம்பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் சுந்தரன் மதியாது செல்கிறான் அவனை எமதிடத்தில் பணியச்செய் என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரிய வந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் முருகன் தான் பலிபீட உருவில் அமைந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடிகளின் ஊடேயும். பசுவின் கொளம்பின் மூலமாகவும் வெளிப்பட்ட அவருக்கு அருள்மிகு கொளஞ்சியப்பர் எனும் திருநாமத்தை சூட்டி வழிபட்டு வந்துள்ளார்கள்.
மேலும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் இத்திருத்தலத்தில் ஜீவசித்தி பெற்றுள்ளார் என வாய்மொழி கூற்றுக்கள் மூலம் தெரியவருகிறது. சித்தர்கள் ஜீவசித்தி பெற்றுள்ள திருத்தலமாகவும், தமிழ் கடவுள் முருகன் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் இத்தலம் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகத்திகழ்கிறது.