Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர் - 607002, கடலூர் .
Arulmigu Padaleeswarar Temple, Thirupathiripuliyur, Cuddalore - 607002, Cuddalore District [TM020366]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு 1976 ஆம் ஆண்டு புலவர் க. பா. வேல்முருகர் அவர்களால் தொகுக்கப்பட்ட ஸ்தல வரலாற்றினை 1998-ல் மறு மதிப்பாக வெளியிடப்படுகிறது. தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர் இது அப்பரடிகள் வாக்கு, பிற நான்மார் இங்ஙனம் கூறவில்லை. அப்பரடிகளும் வேறு தலங்களுள் எதனையும் இங்ஙனம் சிறப்பிக்கவில்லை. ஈன்றாளுமாய் என்னும் திருப்பதிகத்தில் இரண்டு இடங்களில் சூக்கும ஐந்தெழுத்தை வெளிப்பட ஓதியருளியதோடு, மேற்கண்ட தொடர் அமைந்த மாயமெல்லாம் என்ற திருப்பாசுத்தில் ஐந்தெழுத்தின் கருத்து நுணுக்கங்களையும் அருளியிருக்கிறார். இத்தகைய திருப்பதிகம் எந்தத்தலத்திற்கும் அமையவில்லை. எனவே திருப்பாதிரிப்புலியூர் ஏற்றமுள்ள தலம் என்பது வெள்ளிடைமலை. 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தத் தலத்தில் அடியார்கள் யாவரும் அரனைப் பூசித்திருக்க வேண்டுமென்னும்...